JoomlaLock.com All4Share.net

Background Video

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2019 00:00

அக்டோபர் 17- ல் வடகிழக்கு பருவ மழை தொடக்கம் Featured

Written by 
Rate this item
(0 votes)

அக்., 17 ம் தேதியை ஒட்டி, வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நிருபர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: தென் இந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசை காற்று வீச துவங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை, வட மற்றும் மத்திய இந்தியாவில் படிப்படியாக விலகி வருகிறது.

இதனால், வடகிழக்கு பருவமழை அக்., 17 ஒட்டிதுவங்க வாய்ப்பு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோபிசெட்டி பாளையத்தில் 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை புறநகர் பகுதிகளில், லேசான மழை பெய்யக்கூடும். வடகிழக்கு பருவமழை, வழக்கத்தை விட 2 நாட்களுக்கு முன்னதாகவே துவங்க வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு இயல்பான அளவு வடகிழக்கு பருவமழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Read 339 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…