JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

குழப்பும் கமல் அரசியல் வானில் தேறுவாரா ?

 நடிகர் கமல் அரசியலுக்கு வந்து விட்டார். மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியையும் துவக்கி விட்டார். இது நடந்து சில நாட்கள் தான் கடந்துள்ளது. அதற்குள் ஒரு முழு அரசியல்வாதிக்கு உரிய தகுதியை அவர் பெற்று விட்டார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். Image result for கமல்ஹாசன் புகைப்படங்கள்

குறிப்பாக, டாஸ்மாக் மதுக்கடைகள், பெரியார் குறித்த அவரது பேச்சில், 'தள்ளாட்டம்' தான் காணப்படுகிறது. 

* மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கமல், தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். வேண்டும் என்றால், சிறிது தூரம் நடந்து சென்று குடித்து கொள்ளட்டும் என்றார்.

* அடுத்த சில நாட்களில், ' மது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமையை அரசியல்வாதிகள் உருவாக்கி விட்டனர். திடீரென மது விலக்கு என்றால் மக்கள் வேறு தீய பழக்கங்களுக்கு அடிமையாக வாய்ப்புள்ளது; மதுவிலக்கு கொண்டு வந்தால் கொலைகள் நிறைய நடக்கும்; பூரண மது விலக்கு என்று கூறி பெண்களை ஏமாற்ற வேண்டாம்' என்ற கருத்தை வெளியிட்டார்.

* இந்த கருத்துக்கு பிறகு, டாஸ்மாக் கடைகளுக்கு கமல் ஆதரவு என்ற கருத்து பரவியது. உடனே, டுவிட்டரில், 'ஊடக நண்பரே டாஸ்மாக்குக்கு கமல் ஆதரவு என்ற செய்தி தவறு. திருத்திக் கொள்க. இல்லையேல் பொய் சொல்கிறீர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாவீர்' என, பத்திரிகையாளர்களுக்கு சாபம் விடுத்தார். இப்படியாக தான் டாஸ்மாக் விஷயத்தில் கமல், ' தள்ளாட்டம்' தொடர்கிறது. 

இதற்கு அடுத்தபடியாக ஈ.வெ.ரா., விஷயத்திலும் கமல் ஒரு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிபோல் பேச தொடங்கி விட்டார். பா.ஜ., தேசிய செயலர் எச். ராஜா, ஈ.வெ.ரா., சிலை குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய போது கமல் டுவிட்டரில், ' அன்பார்ந்த ஸ்டாலின், வைகோ, திருமாவளன், சீமான், வீணாக தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்க வேண்டாம். எல்லா சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையர் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம். வழிபடுதல் வேறு, வழி நடப்பது வேறு' என்று கூறியிருந்தார்.  Image result for கமல்ஹாசன் புகைப்படங்கள்

ஆனால், இன்று( மார்ச் 6) பத்திரிகையாளர்களை சந்தித்த கமல், ' பெரியாரின் உயரம் மிகப் பெரியது. அதை யாரும் தொட்டு விட முடியாது. அவரது சிலைக்கு மக்களே பாதுகாப்பு கொடுப்பார்கள்' என்று புது விளக்கம் கொடுத்தார். 

கவிஞர் பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று, ' தமிழுக்கு அமுதென்று பெயர்...' அது போல் கமலுக்கு ஒரு பாடல் எழுதினால், ' கமலுக்கு குழப்பம் என்று பெயர்...' என்று கூறி விடலாம்.

கட்சியின் சார்பில் முதன் முதலில் வெளியான அறிக்கையில், ' ஸ்தாபக தலைவர்' என்று குறிப்பிட்டு, அடுத்த சில மணி நேரத்தில், ' தலைவர்' என்று மாற்றியது கூட இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம். 

இப்படி அடிக்கடி தன்னையும் குழப்பி ,மக்களையும் குழப்பும் கமலஹாசன் ஒரு அரசியல்வாதிக்கு உரிய தகுதியை அடைந்து விட்டார் எனபது ஒரு புறமிருக்க, மறுபுறம் மக்களிடம் நம்பகத்தன்மையை இழந்து விடும் அபாயம் நேர்ந்து விடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

Read 127 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…