JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

மீண்டும் கிளம்பும் 2ஜி பூதம் - கலக்கத்தில் திமுக

'2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டால், நாட்டுக்கு நஷ்டம் ஏற்பட்டது; இந்த ஊழலால், நாட்டுக்கு பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது' என, டில்லி உயர் நீதிமன்றத்தில், சி.பி.ஐ., தெரிவித்து உள்ளது. 2ஜி,ஸ்பெக்ட்ரம்,முறைகேடு,விசாரணை,துவங்கியது மத்தியில், காங்., தலைமையில் இருந்த, ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது, 2007 -- 2008ல், தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தார். 

அப்போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்தார். Image result for 2 g spectrum scam images

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு கொள்கையால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, அதில் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த மோசடி தொடர்பாக, சி.பி.ஐ., இரு வழக்குகளையும், இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை ஒரு வழக்கையும் பதிவு செய்தன. இந்த வழக்குகள் விசாரணை, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

ஏழு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்குகளில், சிறப்பு நீதிமன்றம், ௨௦௧௭ டிச., ௨௧ல் தீர்ப்பு அளித்தது. சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்ட, ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான, கனிமொழி உட்பட, 17 பேரையும் விடுதலை செய்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, கருணாநிதியின் மனைவி தயாளு உட்பட, 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்குகளில், குற்றங்களை நிரூபிக்க, சி.பி.ஐ., தவறி விட்டதாக, தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார். 

நாடு முழுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக, சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும் அறிவித்தன. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய, சி.பி.ஐ.,க்கும், அமலாக்கத் துறைக்கும், மத்திய அரசு எழுத்துபூர்வமாக அனுமதியளித்தது.இதையடுத்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை சார்பில், மார்ச், 19ம் தேதியும், சி.பி.ஐ., சார்பில், மார்ச்,20ம் தேதியும், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, ராஜா, கனிமொழி உட்பட அனைவருக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது. 

இந்நிலையில், மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, டில்லி உயர் நீதிமன்றத்தில், நீதிபதி, எஸ்.பி.கார்க் முன்னிலையில் நேற்று நடந்தது. சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா கூறியதாவது:'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடால், அரசுக்கு, 1..79 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, சி.ஏ.ஜி., தெரிவித்தது.

நாடு, சுதந்திரம் அடைந்த பின் நடந்த மிகப்பெரும் முறைகேடு இது தான். இதனால், நாட்டுக்கு இழப்பு மட்டுமின்றி, பெரும் அவமானமும் ஏற்பட்டது.இந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், பதில் மனு தாக்கல் செய்ய,அவகாசம் கேட்டுள்ளதை ஏற்க முடியாது. வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில், இவ்வாறு கேட்டுள்ளனர். இதற்கு, நீதிமன்றம் அனுமதியளிக்கக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார். Image result for dmk and 2 g spectrum scam images

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'இந்த வழக்கில், பல குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை தனித்தனியாக விசாரிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.இரு தரப்பு வாதங்களுக்கு பின், சி.பி.ஐ.,யின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை, ஆக., 2க்கும், அமலாக்கத்துறையின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை, ஆக., 6க்கும் நீதிபதி, கார்க் ஒத்திவைத்தார்.

'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த பண மோசடிகள் தொடர்பாக, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது, இது தொடர்பாக, குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்கு சொந்தமான, 223 கோடி ரூபாய் மதிப்பு சொத்துகளை, அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை யடுத்து, அமலாக்கத்துறை பறிமுதல் செய்த சொத்துகளையும் விடுவிக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், டில்லி உயர் நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:இந்த வழக்கு தொடர்பாக, பறிமுதல் செய்யப்பட்ட, 223 கோடி ரூபாய் மதிப்பு சொத்துகளை விடுவிக்க, எந்த உத்தரவும் இப்போது பிறப்பிக்க கூடாது. அது, மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் மீது, இப்போது உள்ள நிலையே தொடர அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இதை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

Read 393 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…