JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

நடிகர் ரஞ்சித் பா.ம.க.வில் இணைந்தார்
திரைப்பட நடிகர் ரஞ்சித், நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் தன்னை பா.ம.க.வில் இணைத்துக்கொண்டார்.
 
நடிகர் ரஞ்சித்க்கு டாக்டர் ராமதாஸ், கட்சியில் மாநில துணை தலைவர் பதவி வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், திரைப்பட நடிகர் ரஞ்சித் பன்முக ஆளுமை உள்ள கலைஞர் ஆவார். என்னை போல் போராட்ட குணம் உள்ளவர். சமூகத்தில் நடைபெறும் அவலங்களை சகிக்க முடியாமல் குரல் கொடுக்கும் இளைஞர். மனிதநேயம் உள்ள அவர், பொதுசேவையில் ஈடுபாடு கொண்டவர் ஆவார். பா.ம.க.வின் கொள்கைகள், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யின் கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு, நடிகர் ரஞ்சித் பா.ம.க.வில் இணைந்துள்ளார் என்று தெரிவித்தார்.

நடிகர் ரஞ்சித் கூறுகையில், டாக்டர் ராமதாஸ், அரசியலை சமூகநீதி சிந்தனையுடன் மனிதநேயமிக்க சமத்துவத்துடன், நேர்மையான முறையில் நடத்தி வருவதால், அவர் தந்தை என்கிற உணர்வுடன் பா.ம.க.வில் நான் இணைந்துள்ளேன். என்னை அந்த கட்சியில் சேரலாம், இந்த கட்சியில் சேரலாம் என்றனர். ஆனால் பா.ம.க.வில் நான் சேருவதை என்னுடைய தந்தை உள்பட குடும்பத்தினர் அனைவரும் வரவேற்றனர் என்று கூறினார்.

 

Read 69 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…