JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

திமுக : கொந்தளிக்கும் தலைமை கழக பேச்சாளர்கள்

தி.மு.க தலைமையின் மீது கொந்தளிப்பில் இருக்கின்றனர் தலைமைக் கழகப் பேச்சாளர்கள். `கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்துவதற்குக்கூட எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. பதவி கிடைக்காத வருத்தத்தில் திருச்சி சிவாவும் ஆ.ராசாவும் இருப்பதுதான் இத்தனைக்கும் காரணம்' என்கின்றனர் பேச்சாளர்கள். 

சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். மருத்துவ சிகிச்சை நிறைவடைந்து, நேற்று மாலை வீடு திரும்பிவிட்டார். அதேநேரம், வடசென்னையில் நேற்று கருணாநிதிக்குப் புகழ் அஞ்சலி விழா ஒன்றை நடத்தியிருக்கிறார் மாவட்டச் செயலாளர் சேகர்பாபு.

இந்த விழாவில் பேசியவர்கள், சேகர்பாபுவையும் தாயகம் கவியையும் புகழ்ந்து பேசியுள்ளனர். `புகழ் அஞ்சலி கருணாநிதிக்காக...சேகர் பாபுவுக்கா...' எனக் கட்சி நிர்வாகிகள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேடையில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்தும், அறிவாலய வட்டாரத்தில் தீவிர விவாதம் நடந்துள்ளது.  

``சிறுநீரகத் தொற்றின் காரணமாக ஓய்வில் இருக்கிறார் ஸ்டாலின். அவர் அறிவாலயத்துக்கு வராததால், நிர்வாகிகள் சிலர் இஷ்டத்துக்குச் செயல்படுகின்றனர். வடசென்னையில் நடந்த கருணாநிதி புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில், `துறைமுகத்தின் மறைமுக அமைச்சரே..' என ஒருவர் துதிபாடுகிறார். இன்னொருவரோ, `கவிகImage result for trichy siva-stalin,a.raja photos imagesளின் தாயகமே' என தாயகம் கவியைப் புகழ்கிறார்.

உண்மையில் நேற்று கருணாநிதிக்காகப் புகழ் அஞ்சலி கூட்டம் நடக்கவில்லை. நேற்றைய கூட்டத்தில் பேசிய 7 பேரும், சுமார் 25 நிமிடங்கள் இவர்கள் இருவரையும் புகழ்ந்து பேசியுள்ளனர். இதைக் கட்சிக்காரர்கள் யாரும் ரசிக்கவில்லை. கழகத்தின் பேச்சாளர்களைப் புறம்தள்ளிவிட்டு பணம் கொடுத்து வெளியில் உள்ளவர்களை அழைத்து வந்து பேச வைக்கின்றனர்" என ஆதங்கத்தோடு விவரித்த தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், 

``கருணாநிதி மறைவுக்குப் பிறகு அவருக்குப் புகழ் அஞ்சலி செலுத்தும் வகையில், திரைப்படக் கலைஞர்கள் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டார் ஸ்டாலின். தொடர்ந்து, கவிஞர்கள், மருத்துவர்கள் எனத் தனித்தனியாக நடந்த 5 புகழ் அஞ்சலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இந்த சமயத்தில், கொள்கை பரப்புச் செயலாளர்களான ஆ.ராசாவிடமும் திருச்சி சிவாவிடமும் கோரிக்கை ஒன்றை வைத்தனர் கழகப் பேச்சாளர்கள். அவர்கள் பேசும்போது, `முப்பது வருட காலமாக கருணாநிதி வாழ்க எனக் கத்திவிட்டோம். அவரது மரணத்துக்குப் பிறகு மாநிலம் முழுவதும் புகழ் அஞ்சலிக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இதற்காக எங்களுக்குப் பணம் எதுவும் வேண்டாம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தலைமைக் கழகம் தயார் செய்து கொடுக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

அவர்கள் இருவரும் இந்தக் கோரிக்கையைக் கண்டுகொள்ளவே இல்லை. கடந்த ஒரு மாத காலத்தில் பத்து முறைக்கும் மேல் கோரிக்கை வைத்துவிட்டோம். பேச்சாளர் என்ற அணியையே கலைக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்" எனக் கொதித்தவர்,  Image result for trichy siva-stalin,a.raja photos images

``துரைமுருகனிடம் இருந்த கட்சியின் முதன்மைச் செயலாளர் பதவி டி.ஆர்.பாலுவுக்குச் சென்றுவிட்டது.`இந்தப் பதவி தனக்கு வந்து சேரும்' என எதிர்பார்த்துக் காத்திருந்தார் ஆ.ராசா. இதில் அவருக்கு ஏமாற்றம்தான். திருச்சி சிவாவும் ஸ்டாலின் மீது கோபத்தில் இருக்கிறார். கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரம், நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் பதவி ஒன்று காலியாக இருந்தது.

இந்தப் பதவிக்கு சிவாவின் பெயரை அனைவரும் முன்மொழிந்தனர். அவர் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், இதனை விரும்பாத ஸ்டாலின், `அரசாங்கத்தில் நாம் பங்கெடுக்க வேண்டாம்' எனக் கூறிவிட்டார். அந்தக் கோபத்தில் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு அமைதியாக இருக்கிறார் சிவா. 

இவர்கள் இருவரது செயலால், பேச்சாளர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்சிக்கு இரண்டு கொள்கை பரப்புச் செயலாளர்கள் இருந்தும் பிரயோஜனமில்லை. பதவிக்காகத்தான் இவர்கள் பார்க்கிறார்களே தவிர, கருணாநிதிக்குப் புகழ் அஞ்சலி செலுத்துவதற்காகக் காத்திருக்கும் பேச்சாளர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டனர்.

இதுதொடர்பாக கொள்கை பரப்பு இணைச் செயலாளராக இருக்கும் புதுக்கோட்டை விஜயாவும் சண்டை போட்டுவிட்டார். அப்படியும் இவர்கள் கேட்கவில்லை. இப்போது ஸ்டாலினும் கட்சித் தலைவராகிவிட்டார். புகழ் அஞ்சலி முடிந்து, கண்டனப் பொதுக்கூட்டமும் தொடங்கிவிட்டது. பேச்சாளர்களை யாரும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இதனால், `இனி இவர்கள் இருவரும் அனுப்பினாலும் போகக் கூடாது' என்ற முடிவுக்கு வந்துவிட்டோம்" என்றார் ஆதங்கத்துடன். 

Read 203 times Last modified on வெள்ளிக்கிழமை, 28 செப்டம்பர் 2018 09:22
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…