JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

அடுத்த சுற்றுக்கு தயாராகும் மு.க.அழகிரி

மறைந்த முன்னாள் முதல்வர், கருணாநிதிக்கு, திண்டுக்கல்லில், வரும், 13ல், புகழஞ்சலி கூட்டத்தை, முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி நடத்துகிறார். இதில், தன் பலத்தை நிரூபிப்பதன் வாயிலாக, தி.மு.க., துணை பொதுச்செயலர், ஐ.பெரியசாமிக்கு, 'செக்' வைக்க திட்டமிட்டுள்ளார்.

அடுத்த ரவுண்டு,ஆரம்பம்,அழகிரி,அட்டகாச வியூகம் முன்னாள் முதல்வர், கருணாநிதி மறைவுக்கு பின், அவரது மகன் அழகிரியை, கட்சியில் சேர்க்க, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் மறுத்து விட்டார்.இதனால், தன் பலத்தை நிரூபிக்க விரும்பிய அழகிரி, கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில், சென்னையில் அமைதி பேரணி நடத்தினார். அத்துடன், அழகிரியை கட்சியில் சேர்க்கக் கோரி, அவரது ஆதரவாளர்கள், மாவட்ட வாரியாக, கையெழுத்து இயக்கமும் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், 'தென் மண்டலத்தில், அழகிரிக்கு எந்த செல்வாக்கும் இல்லை; கட்சி முழுவதும், ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ளது' என, தி.மு.க., துணை பொதுச்செயலர், ஐ.பெரியசாமி கூறினார். இதனால், அவருக்கு, 'செக்' வைக்கும் வகையில், அவரது சொந்த மாவட்டமான திண்டுக்கல்லில், வரும், 13ல், கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம் நடத்த, அழகிரி திட்டமிட்டுள்ளார். இதற்காக, ஸ்டாலின் மற்றும் பெரியசாமி அதிருப்தியாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றனர்.

அதேநேரத்தில், 'அழகிரியின் கூட்டத்திற்கு செல்லக்கூடாது' என, அவரது ஆதரவாளர்களிடம், தொலைபேசி வழியாக, ஐ.பெரியசாமி பேசி தடுத்து வருவதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read 65 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…