JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

காங்கிரசின் பிச்சைக்காரர் வேடம் : தொடங்கியது வசூல் வேட்டை

அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்காக, கட்சியை பலப்படுத்தும் பணியில், காங்., தலைமை தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடம் உண்டியல் வசூல் செய்யும் கம்யூனிஸ்டுகளை போல், காங்கிரசாரும் நிதி வசூலில் களம் இறக்கப்பட்டு உள்ளனர். 'பூத்' வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, வேட்டை வேகமெடுத்துள்ளது.

மத்தியில் ஆளும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசின் பதவிக் காலம், அடுத்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைவதால், அதற்கு முன், லோக்சபா தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளில், தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி யில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், பிரதான அரசியல் கட்சிகள், தற்போதே, தேர்தல் பிரசாரத்தை துவக்கிவிட்டன.

மத்தியில், மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்புடன், பா.ஜ., தலைமை தீவிரமாக பணியாற்றி வருகிறது.பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப் பயணம் செய்து, மாநில நிர்வாகிகளை சந்தித்து, தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய அரசின் சாதனைகள், மக்கள் நலத்திட்டங்களை, பொதுமக்களிடம் எடுத்துரைக்கும்படி, 'பூத்' கமிட்டி நிர்வாகிகளிடம் வலியுறுத்தியுள்ளார். பா.ஜ.,வின் அதிரடி வியூகங்களால் மிரட்சி அடைந்துள்ள, காங்., தலைவர் ராகுல், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தேர்தல் திட்டமிடும் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். Image result for indian national congress 's donation collection cartoons images photos

அதன் பின், கட்சியை பலப்படுத்தவும், நிதிஆதாரத்தை பெருக்கவும், 'தேர்தல் நிதி வசூல்' திட்டத்தை அறிவித்து உள்ளார். இதன் மூலம், கட்சியின் நிதிப் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது மட்டுமின்றி, பா.ஜ., அரசின் ஊழல்களை, மக்களிடம் எடுத்துக் கூறவும், இந்த திட்டத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தும் படி, கட்சி நிர்வாகிகளுக்கு, காங்., தலைவர் ராகுல் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: லோக்சபா தேர்தல் மட்டுமின்றி, அடுத்த மாதம் நடக்கவுள்ள, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெறும் நோக்கில், காங்., தலைவர் ராகுல், தேர்தல் நிதி வசூல் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். அக்., 2 முதல், நவ., 14 வரை நடக்கும் இந்த வசூல் திட்டத்தின் மூலம், கட்சியின் நிதி பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்கும்.

இதற்காக, ஒவ்வொரு தொகுதியிலும், 'பூத்' வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒரு நிர்வாகியின் கீழ், 10 உறுப்பினர்கள் நிதி வசூல் பணியில் ஈடுபடுவர். இதற்காக, ஒவ்வொரு குடும்பத்திடமும், 50, 100, 500 மற்றும் 1,000 ரூபாய் என்ற அடிப்படையில் ரசீது கொடுத்து, பணம் வசூலிக்கப்படும். ஒவ்வொரு உறுப்பின ரும், 20 குடும்பங்களிடம் தொடர்ந்து நேரடி தொடர்பில் இருப்பர். அவர்களை, தினமும் சந்தித்து, 'ரபேல்' போர் விமான ஒப்பந்த முறைகேடு உள்ளிட்டவை குறித்து, எடுத்துரைப்பர். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். 

'பாரம்பரியம் மிக்க தேசிய கட்சியான காங்கிரஸ், பொதுமக்களிடம் நேரடி நிதி வசூல் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது துரதிர்ஷ்டவசமானது' என, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து, அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறியதாவது: சுதந்திர இந்தியாவை, 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்த பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சி, தற்போது, பொதுமக்கள் மத்தியில் நேரடி நிதி வசூலில் இறங்கியுள்ளது.

கம்யூனிஸ்டுகள் தான், உண்டியல் வசூலில் ஈடுபடுவது வழக்கம். தற்போது, நீண்ட பாரம்பரியம் உடைய, காங்., ரசீது புத்தகங்களுடன், தேர்தல் நிதிக்காக, மக்களை தேடி வருவது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்

Read 67 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…