JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

'டெய்லி ஹண்ட்' தேர்தல் கருத்துக் கணிப்பில் முந்தும் மோடி

இணையதள பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில், 50 சதவீதத்துக்கும் அதிகமானோர், பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக பிரதமராவதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

டெய்லி ஹன்ட்' என்ற, ஆங்கில இணையதள பத்திரிகை மற்றும், நீல்சன் இந்தியா என்ற ஆய்வு நிறுவனம் இணைந்து, சமீபத்தில் அரசியல் கருத்துக் கணிப்பு நடத்தின.

இதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி குறித்தும், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்தும், கேள்விகள் கேட்கப்பட்டன. மொத்தம், 54 லட்சம் பேர், இந்த, 'ஆன்லைன்' கருத்துக் கணிப்பில் பங்கேற்றனர்.

இதில், 63 சதவீதத்துக்கும் அதிகமானோர், நரேந்திர மோடியின் நான்காண்டு கால ஆட்சி திருப்திகரமாக இருப்பதாகவும், கடந்த தேர்தலின் போது, அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை, தற்போதும் தொடர்வதாகவும் பதில் அளித்தனர். மேலும், 'மோடி இரண்டாவது முறையாக பிரதமரானால், நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும்' என, 50 சதவீதத்துக்கும் Advertisement அதிகமானோர் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர்.

'நெருக்கடியான நேரத்தில், நாட்டை சிறப்பாக வழிநடத்தும் தலைவர் யார்' என்ற கேள்விக்கு, 'மோடி' என, 62 சதவீதத்தினரும், 'ராகுல்' என, 17 சதவீதத்தினரும் பதில் அளித்து இருந்தனர்.

 

Read 54 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…