JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

கர்நாடகா இடைத்தேர்தல் : பாஜகவிற்கு பலத்த பின்னடைவு

கர்நாடகம் மாநிலத்தின் சிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது.

இந்த தொகுதிகளில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் போட்டியிட்டது. பெல்லாரி உள்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 31 பேர் போட்டியிட்டனர்.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது.

ராமநகரம் சட்டமன்றம் தொகுதியில் ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் அனிதா குமாரசாமி 1 லட்சத்து 09 ஆயிரத்து 137 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், ஜம்கண்டி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நியாமகவுடா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 39 ஆயிரத்து 480 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோல், மாண்டியா பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரை விட ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சிவராமெகவுடா 1 லட்சத்து 96 ஆயிரத்து 883 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். மேலும், பெல்லாரி பாராளுமன்ற தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா 1லட்சத்து 84 ஆயிரத்து 203 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.

நடைபெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஷிமோகா தொகுதியில் மட்டும் 36 ஆயிரத்து 467 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் ராகவேந்திரா முன்னிலையில் இருக்கிறார்.

இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், ஜனதா தளம் கட்சி கூட்டணி தலா இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்பதை கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதே சமயம், பாஜகவுக்கு இந்த தேர்தல் முடிவுகள் பின்னடைவை அளித்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Read 58 times Last modified on செவ்வாய்க்கிழமை, 06 நவம்பர் 2018 08:43
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…