JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

ஜெயலலிதாவை சீண்டும் 'சர்கார்'

விஜய் நடித்து வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தின் பெயர் கோமளவள்ளி என்பதை குறிப்பிட்டு மக்கள் சமூகவலைதளங்களில் புதிய பிரச்னையை கிளப்பியுள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரும் கோமளவள்ளி தான் எந்த நோக்கத்தில் வில்லி கதாபாத்திரத்திற்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் சர்கார் திரைப்படத்தில் கதை வேறொருவருடையது என்று தொடங்கிய பிரச்னை சுமூக பேச்சுவார்த்தை, சமரசம் செய்த திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் ராஜினாமா என்று அடுத்தடுத்து பல திருப்பங்களை ஏற்படுத்தியது.

இந்த பிரச்னைகளெல்லாம் முடிந்து வெற்றிகரமாக தீபாவளி நாளான நேற்று திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் சர்காரில் தேவையற்ற சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார். சர்கார் இப்போதைய அரசுக்கு பல சாட்டையடி கேள்விகளை தனது வசனங்கள், காட்சிகள் மூலம் முன்வைப்பதாகவும் படம் பார்த்தவர்கள் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

இதில் புதிய சர்ச்சையாக கிளம்பி இருப்பது சர்கார் படத்தில் வில்லி கதாபாத்திரத்திற்கு கோமளவள்ளி என பெயரிடப்பட்டுள்ளதாம். இதுதற்செயலாக நடந்ததா, அரசியல் நோக்கத்திற்காக வைக்கப்பட்டதா அல்லது அதிமுகவை சீண்டுவதற்காகவா, கதைக்கு தேவைப்பட்டதாலா என்று டிவி சேனல் விவாதம் நடத்தும் அளவிற்கு பிரச்னை பெரிதாகியுள்ளது. ஏதேச்சையாக வைக்கப்பட்டதா அரசியல் உள்நோக்கமா ?

கோமளவள்ளி என்பது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயர். தமிழ் ஐயங்கார் குடும்பத்தை சேர்ந்த ஜெயராமன் வேதவள்ளி தம்பதிக்கு அவர்களின் குடும்ப வழக்கப்படி பாட்டியின் பெயரான கோமளவள்ளி சூட்டப்பட்டுள்ளது. விஜயை ஹீரோவாக காட்டும் படத்தில் கோமளவள்ளி என்ற பெயரில் வில்லி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read 45 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…