JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

மத்திய பிரதேச தேர்தல் : இந்தியா டீவி  கருத்துக்கணிப்பில் முந்துகிறது பாஜக

மத்திய பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ., ஆட்சி வரும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு வரும் நவம்பர் 28 ம் தேதி சட்டசபைக்கான தேர்தல் நடக்கிறது. ஓட்டுக்கள் டிச.11 ம் தேதி எண்ணப்படுகிறது. இங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

மக்கள் நலத்திட்டங்கள் காரணமாக நாங்கேள வெற்றி பெறுவோம் என பா.ஜ., உற்சாகமாக உள்ளனர். அதே நேரத்தில் இங்கு பா.ஜ., ஆட்சியை இழக்கும் என காங்கிரஸ் கூறி வருகிறது.

இந்தியா டிவி மற்றும் சி.என்.எக்ஸ். இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 122 இடங்களை பெற்று பா.ஜ., ஆட்சியை பிடிக்கும். ஆனாலும் காங்கிரசுக்கு 95 தொகுதிகள் வரை கிடைக்கும் .

காங்கிரஸ் பலமான எதிர்கட்சியாக அமரும். பா.ஜ., கடந்த தேர்தலில் 165 தொகுதிகளை வென்றது. காங்கிரஸ் 58 தொகுதிகளை வென்றுள்ளது. பா.ஜ.,வுக்கு இந்த முறை வெற்றி எண்ணிக்கை குறையலாம் என்றும் கூறியுள்ளது.
எனவே ம.பி.,யில் சிவராஜ்சிங் சவுகான் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு உள்ளது.

Read 37 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…