JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

'நேஷனல் ஹெரால்ட் ' வழக்கு : சோனியா ,ராகுலுக்கு பின்னடைவு

'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை தொடர்பான வழக்கில், காங்கிரஸ் தலைவர், ராகுல், அவருடைய தாய் சோனியாவின், 2011-12 வருமான வரி கணக்கை மீண்டும் ஆய்வு செய்ய, வருமான வரித் துறைக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனம் வெளியிடும், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ் தலைவர் ராகுல், முன்னாள் தலைவரான அவருடைய தாய், சோனியா உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள, 'யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட்' வாங்கியது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரிக்கும் வகையில், இந்த பரிமாற்றம் நடந்துள்ளதாக, வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், '2011-12ல் சோனியா, ராகுல் தாக்கல் செய்த, வருமான வரி கணக்கை மீண்டும் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்' என, வருமான வரித் துறை கோரியிருந்தது. இதற்கு, டில்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, 'சோனியா, ராகுல், காங்கிரஸ் மூத்த தலைவர், ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோரின் வருமான வரிக் கணக்கை, வருமான வரித்துறை மீண்டும் ஆய்வு செய்யலாம்' என, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

'அதே சமயம், இந்த ஆய்வை உடனடியாக மேற்கொள்ளக் கூடாது' என, உச்ச நீதிமன்ற அமர்வு கூறிஉள்ளது. வழக்கின் விசாரணை, அடுத்த ஆண்டு, ஜன., 8க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது, ராகுல் மற்றும் சோனியாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Read 37 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…