JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

உத்திர பிரதேசத்தில் தனிமரமானது காங்கிரஸ்

 உத்தர பிரதேச மாநிலத்தில், அகிலேஷ், மாயாவதி கூட்டு சேர்ந்து விட்டதால் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அனைத்து (80) தொகுதிகளிலும் காங்., தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சி மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறி உள்ளார்.

லோக்சபாவிற்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் கட்சிகள் தீவிரமாக உள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக, 80 லோக்சபா தொகுதிகளை கொண்டது உத்தர பிரதேச மாநிலம். இங்கு, நீண்ட காலமாக, எதிர், எதிர் துருவங்களாக செயல்பட்டு வந்த, பரம எதிரிகளான, மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவின், சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன. ரேபரேலி, அமேதி தொகுதிகளை தவிர்த்து மற்ற தொகுதிகளில் இரு கட்சிகளும் போட்டியிட உள்ளன. 

இதனையடுத்து அங்கு தனித்து விடப்பட்ட காங்கிரஸ் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை நடத்தியது. உ.பி., மாநில மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத், லக்னோவில் காங்., நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பின்னர் குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறுகையில்; உ.பி.,யில் 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு பா.ஜ.,வை வீழ்த்தும். 2009 தேர்தலை போல், இங்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கைப்பற்றுவோம். ( 2009 ல் 21 தொகுதிகளில் காங்., வெற்றி பெற்றது ) பா.ஜ.,வை எதிர்க்கும் எந்த கட்சியாவது காங்கிரசுடன் கூட்டணி வைக்க விரும்பினால், அதனை கூட்டணியில் சேர்த்து கொள்வோம். உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு எதிரான மஹா கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுவதையே விரும்பினோம். ஆனால், அதனை சிலர் விரும்பாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியில் காங்கிரஸ் சேர்க்கப்படாததால், தொண்டர்கள் கவலைப்படவில்லை. மாறாக, 80 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறினார்.

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ராமர்கோயில் கட்ட பா.ஜ., வாக்குறுதி அளித்துள்ளது. இதற்காக தீவிரமாக முயற்சி செய்து வருகிறோம். ராமர் கோயில் கட்ட ராகுல் தடையாக உள்ளார். காங்கிரஸ் ஓட்டுக்காக அரசியல் செய்கிறது. 
சமாஜ்வாதி பகுஜன் சமாஜ் கூட்டணியால் எங்களுக்கு பாதிப்பு இல்லை. பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அகிலேஷ் தெளிவுபடுத்த வேண்டும். வரும் தேர்தலில் 280க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும் . இவ்வாறு அவர் கூறினார்.

Read 241 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…