JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

புதுச்சேரி :  கிரண்பேடிக்கு எதிராக நாராயணசாமி தர்ணா

 புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி கவர்னர் மாளிகை முன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.

பிப்ரவரி 11 முதல் புதுச்சேரியில் ஹெட்மெட், சீட்பெல்ட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டது. இந்நிலையில் பிப்.,11 காலை முதலே கிரண்பேடி நேரடியாக களத்தில் இறங்கி உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதா என கண்காணித்தார். சாலையில் நின்று, வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிய அறிவுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளும் இன்று சிக்னலில் நின்று, ஹெல்மெட் அணிய அறிவுறுத்தினர். இந்நிலையில் கட்டாய ஹெல்மெட் உத்தரவை உடனடியாக அமல்படுத்த முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.

துணைநிலை கவர்னரின் தலையீட்டால் அரசை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டிய நாராயணசாமி, கவர்னர் மாளிகை முன் அமைச்சர்களுடன் சென்று தர்ணா போராட்டம் நடத்தினார். நாராயணசாமி கருப்பு சட்டை அணிந்தும், அமைச்சர்கள் கழுத்தில் கருப்பு துண்டும் அணிந்து வந்து தர்ணா செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, புதுச்சேரி மக்களுக்கு கிரண்பேடி தொல்லை கொடுத்து வருகிறார். ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட நியமனங்களை கிரண்பேடி நிறுத்தி வைத்து உள்ளார். நிலுவையில் உள்ள கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்கும் வரை தர்ணா போராட்டம் தொடரும் என்றார். இதனால் கவர்னர் மாளிகையில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

Read 30 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…