JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

காங்கிரசை கழற்றி விடும் கட்சிகள்

தேசிய அளவில் காங்கிரசை பல்வேறு கட்சிகளும் கூட்டணியில் சேர்க்காமல் கழற்றி விடுவதால் பிரதமர் மோடிக்கு எதிராக உருவாக்கப்பட்ட மெகா கூட்டணி வலுவிழந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் கருத்துக்கள் நிலவுகிறது.

மத்தியில் பா.ஜ., அரசை அகற்ற வேண்டும் என்பதற்காக, ராகுலை முன்னிலைப்படுத்துவதை காங்கிரஸ் தவிர்த்து வருகிறது. மெகா கூட்டணியில் தங்களையும் இணைத்து கொள்வதற்காக பிரதமர் வேட்பாளர் யார் என்பதையும் அறிவிக்காமல் இருந்து வருகிறது. பா.ஜ.,வுக்கு மாற்றாக தனியாக களம் இறங்காமல், மெகா கூட்டணியில் தங்களை இணைத்து கொள்ளவே காங்கிரஸ்., முயற்சித்து வருகிறது. பல்வேறு ஊழல் புகார்கள் காரணமாக, தனியாக களம் காண காங்கிரஸ் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. 

கோல்கட்டாவில் மம்தா நடத்திய பிரம்மாண்ட மாநாட்டிற்கு காங்., பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தாலும், பா.ஜ., - காங்.,க்கு மாற்றான அணி என்பதே மெகா கூட்டணியின் கொள்கையாக உள்ளது.

கூட்டணி கட்சிகள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க காங்கிரஸ் தயாராக இருந்தாலும், அக்கட்சியை கூட்டணிக்கு ஏற்க மற்ற கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேசின் சமாஜ்வாதி கட்சியும் தங்களின் கூட்டணியில் காங்கிரசை சேர்த்து கொள்ள மறுப்பு தெரிவித்து விட்டன. இதனால் வேறு வழியின்றி உ..பி,.,யில் தனித்து போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு ஆகியோரும் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் காங்., ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தாலும் இதுவரை காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்காமல் முதல்வர் குமாரசாமி காலம் தாழ்த்தி வருகிறார். தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை, ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் எவை என்பது குறித்து திமுக முறைப்படி அறிவிக்கவில்லை. ராகுல் தலைமையை ஏற்க மற்ற கட்சிகள் விரும்பாததே, காங்கிரசை கூட்டணிக்கு சேர்க்காமல் ஒதுக்குவதற்கு காரணம் என கூறப்படுகிறது.

Read 32 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…