JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

சோனியா காந்தியின் உதவியாளர் பாஜகவில் இணைந்தார்

 காங்., தலைவர்கள் சோனியாவுக்கும் ராகுலுக்கும் நெருக்கமானவராக இருந்த டாம் வடக்கன், பா.ஜ.,வில் ஐக்கியமானது, அவர்கள் இருவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் டாம் வடக்கன். டில்லியில் சோனியாவுக்கும் ராகுலுக்கும் உதவியாளராகவும் காங்.,கின் செய்தி தொடர்பாளராகவும் பணிபுரிந்து வந்தார். சோனியா, ராகுலுக்கு நெருக்கமாக நம்பிக்கைக்குரியவராக இருந்தார். சமீப காலமாக இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனால் சென்ற மாதத்தில் இருந்தே டாம் வடக்கன், அலைபாயும் மனதுடன் இருந்துள்ளார்.திடீரென மனது மாறி பா.ஜ.,வில் இணைந்துவிட்டார். இவர் பா.ஜ.,வில் சேர்வது கடைசி வரை யாருக்கும் தெரியாது.

வடக்கன் பா.ஜ.,வில் சேர்ந்ததை ஆமதாபாத்தில் நடந்த காங்., செயற்குழு கூட்டம் முடிந்ததுமே அறிவிக்க வைத்தார் அமித்ஷா. அப்போது தான் அந்த தகவல் காங்.,கில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும் என அவர் நினைத்தார்.வரும் தேர்தலில் கேரளாவில் திருச்சூர் லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் வடக்கன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இவர் போக மேற்கு வங்கத்தில் இருந்து 2 காங்., எம்.பி.,க்கள் பா.ஜ.,வில் இணைவார்கள் என்ற தகவலும் பரவி வருகிறது.

 

Read 62 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…