JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

ராமநாதபுரம் தொகுதியில் கமல் போட்டி

லோக்சபா தேர்தலில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், ராமநாதபுரம் தொகுதியில் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  லோக்சபா, சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கி, பலத்தை பரிசோதிக்க கமல் முடிவு செய்துள்ளார். 'லோக்சபா தேர்தலில் நிச்சயம் நானும் போட்டியிடுவேன். தொகுதி எது என, பின்னர் அறிவிக்கப்படும்' என, 'சஸ்பென்ஸ்' வைத்தார்.

மதுரையில் கட்சி துவக்கிய அன்று காலை, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்துக்குச் சென்று, கமல் மரியாதை செலுத்தினார். அப்துல் கலாமின் லட்சியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கமல், அவரின் நினைவிடத்தில் இருந்தே, தன் அரசியல் பயணத்தை துவக்க விரும்பினார். இதனால் அவர், ராமநாதபுரம் தொகுதியை தேர்வு செய்துள்ளார்.

'பரமக்குடி மண்ணின் மைந்தன்' என்ற அடிப்படையில், மக்களின் ஆதரவு கிடைக்கும் என, அவர் கணக்கு போட்டுள்ளார். 'ராமநாதபுரம் தொகுதியில் கமல் போட்டியிட வேண்டும்' என நிர்வாகிகள், தொண்டர்கள் பலர், கமல் பெயரில் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர்களை திருப்திபடுத்தவும், கமல் இம்முடிவை எடுத்துள்ளார். ஆக, ராமநாதபுரம் தொகுதியில் கமல் களம் காண்பது, ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

Read 1129 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…