JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

தேர்தல் பிரச்சாரம் : முந்தும் அதிமுக - மந்த கதியில் திமுக

லோக்சபா, சட்டபை இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கான செலவுக்கு தொகை வழங்குவதில், அ.தி.மு.க., தலைமை தாராளம் காட்ட உறுதி அளித்துள்ளது. , தி.மு.க.,விலோ, செலவுகள் அனைத்தையும் வேட்பாளர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தேர்தல் என்றாலே, காசு... பணம்... துட்டு...மணி... என்ற நிலையாகி விட்டது. கூட்டணி அமைப்பது முதல், வாக்காளர்களை கவர்வது வரை, எல்லாமே, 'வைட்டமின் ப' இல்லாமல், எதுவும் இல்லை. கூட்டணி அமைப்பதில், அ.தி.மு.க., தலைமை முந்திக் கொண்டது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை வாரி வழங்கியதோடு, செலவுக்கு பணம் வழங்குவதிலும் தாராளம் காட்டியுள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியில், முதல் ஆளாக இணைந்த, பா.ஜ., வை தொடர்ந்து, பா.ம.க., -- புதிய தமிழகம், த.மா. கா.,வை வளைத்ததோடு, கண்ணாமூச்சு காட்டிய, தே.மு.தி.க.,வை கடைசி நேரத்தில் மயக்கி தன் வளையத்துக்குள் கொண்டு வந்தது.இவர்களை தவிர ஜாதி பெயரில் கட்சி நடத்தி வரும் சிலரையும், 'வைட்டமின் ப' மூலம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இடைத்தேர்தல் நடக்கும், 18 தொகுதிகளில், அ.தி.மு.க.,வே போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகள் கேட்காமல் இருக்கும் வகையில், 'நன்றாக' கவனிக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க., சார்பில் நடந்த நேர்காணலில், 'போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தால், தலைமை செலவு செய்வதை போல், உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும்' என்று மட்டுமே கேள்வி கேட்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களிடம், 'கட்சியும் தாராளம் காட்டும்' என, கூறி அனுப்பியதுடன், சொன்ன வாக்கை காப்பாற்றும் வகையில், தொகுதிக்கு ஒரு அமைச்சர் என பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, 'கவனிப்பு'க்கு வழி செய்யப்பட்டுள்ளது. இதனால், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், புது ரத்தம் பாய்ச்சியது போல், புத்துணர்ச்சியுடன் தேர்தல் களத்தில் உள்ளனர்.

ஆனால்,எதிர்முகாமான, தி.மு.க.,விலோ நிலைமை வேறு விதமாக உள்ளது. சீட் கேட்டவர்களிடம் டிபாசிட் பணம் வாங்கிய தலைமை, சீட் கிடைக்காதவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்கி, கட்சி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதினாலும், வேட்பாளர்களுக்கு தாராளம் காட்ட தயாராயில்லை.கூட்டணியில், காங்.,- ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூ.,கள், முஸ்லிம் லீக் இணைந்திருந்தாலும், 'தேர்தல் செலவை, அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்' என்ற நிபந்தனையுடன் தான் தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க., நேர்காணலில் கலந்து கொண்டவர்களிடம், 'தேர்தல் செலவு அனைத்தையும் நீங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். எதிர்தரப்பினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால், நீங்கள் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்' என, கூறி அனுப்பியுள்ளனர்.

லோக்சபா தொகுதியில் மட்டுமின்றி, இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளிலும், ஆளும் கட்சி, களம் இறங்கி வாக்காளர்களை கவர வலை விரித்துவிட்டது. ஆனால், தி.மு.க., தலைமையின் பாராமுகம் இடைத்தேர்தல் தொகுதிகளில் அப்பட்டமாக தெரிகிறது. 'வைட்டமின் ப' இறங்காததால், கட்சி நிர்வாகிகள், உடன்பிறப்புக்கள், தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.தி.மு.க., தலைமையின் முடிவால் வேட்பாளர்கள், தடுமாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஆளும் கட்சியின் வேகத்துக்கு, தி.மு.க., ஈடுகொடுக்குமா என்பது போக போக தெரியும்.

Read 124 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…