JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

பா.ஜ., தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுடில்லி லோக்சபா தொகுதியின், பா.ஜ., எம்.பி.,யாக இருப்பவர், மீனாட்சி லேகி. சுப்ரீம் கோர்ட்டில் இவர், தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:'ரபேல்' போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை, விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக, சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அறிவித்தது. இது பற்றி, கருத்து தெரிவித்த, காங்., தலைவர் ராகுல், 'பிரதமர் மோடி, கொள்ளையடித்திருப்பது உறுதியாகி விட்டது. காவலாளியை திருடன் என, சுப்ரீம் கோர்ட்டே கூறிவிட்டது' என்றார். 

சுப்ரீம் கோர்ட், தன் உத்தரவில், எந்த இடத்திலும், பிரதமர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. இதன் மூலம், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையே மாற்ற, ராகுல் முயற்சித்துள்ளார். அவர் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

 

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, ராகுல் தெரிவித்த கருத்து குறித்து, ஏப்.,22க்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி அவருக்கு , நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், ரபேல் விவகாரத்தில் ராகுல் தெரிவித்த கருத்துகளைப் போன்ற கருத்துகளை நாங்கள் தெரிவிக்கவில்லை. ஆவணங்களை பரிசீலனைக்கு எடுத்து கொள்கிறோம் என தான் தெரிவித்தோம் என தலைமை நீதிபதி கூறினர்.

Read 269 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…