JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்  4 பேரை தகுதி நீக்கம் செய்ய அதிமுக முடிவு

அதிமுக கட்சியை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி ஆகியோரை தமிழக சட்டசபை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ய முடிவு எடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது. இதற்கு பின் பல காரணங்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.

தமிழக அரசியலில் மீண்டும் தகுதி நீக்க காலம் வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்ததாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள்.

இந்த வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் நீண்ட நாட்கள் நடந்து இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரிதான் என்று தீர்ப்பு வந்தது. இந்த நிலையில்தான் மீண்டும் தகுதி நீக்க அஸ்திரத்தை அதிமுக அரசு கையில் எடுத்துள்ளது. 

 அறந்தாங்கி தொகுதியின், ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் தொகுதியின், கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதியின் பிரபு ஆகியோர் அதிர்ச்சி எம்எல்ஏக்கள் ஆவர். அதேபோல் எம்எல்ஏ தமீமுன் அன்சாரியும் அதிமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

Read 119 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…