JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

அரவக்குறிச்சியில் கமல் மீது வழக்குப்பதிவு

அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ம.நீ.ம வேட்பாளர்களை ஆதரித்து கமல் பேசுகையில், 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து 'என மதரீதியாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் அவருக்கு எதிரப்பு வலுத்து வருகிறது.

இந்நிலையில், அரவக்குறிச்சியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் கமல் மீது 153 A, 295 A பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இவரின் பேச்சு இரு சமூகத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் சென்னை மடிப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனிலும், பா.ஜ இளைஞரணி தலைவர் குமார் தலைமையிலான 50 க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர். திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திலும் கமல் மீது இந்து அமைப்பு புகார் கொடுத்துள்ளது.

Read 54 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…