JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

நான்கு முனை போட்டி நிலவும் பஞ்சாப்

கடந்த லோக்சபா தேர்தலின் போது, நாடு முழுதும் மோடி அலை வீசிய போது, வடக்கு மற்றும் எல்லையோர மாநிலங்களில், பா.ஜ.,வுக்கு பலத்த வெற்றி கிடைத்தது. ஆனால், பஞ்சாபில் மட்டும், அப்போது நிலைமை தலைகீழாக இருந்தது.

அங்குள்ள, 13 இடங்களில், பா.ஜ., - சிரோன்மணி அகாலி தளம் கூட்டணி, ஆறு இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அப்போது தான், புதிதாக, லோக்சபா தேர்தலில் குதித்த, அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி கட்சி, நான்கு இடங்களை கைப்பற்றியது; காங்கிரசுக்கு, மூன்று இடங்களே கிடைத்தன.ஆனால், அதற்குப் பிறகு நடந்த, சட்டசபை தேர்தலில், சிரோன்மணி அகாலி தளம் அரசை பதவியிலிருந்து இறக்கிய காங்கிரஸ், ஆட்சியை கைப்பற்றியது. அதன் தலைமையில், இப்போது நடக்கும் லோக்சபா தேர்தலில், யார் வெற்றி பெறுவர் என்பதே, பலத்த கேள்வியாக உள்ளது.

இந்த மாநிலத்தில், வரும், 19ல் தேர்தல் நடக்கிறது. இந்த மாநிலத்தவரை உசுப்பேற்றும் விதமாக, பா.ஜ., பிரசாரம் அமைந்துள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானின் விஷமத்தனம்; அதற்கு, மத்திய அரசு கொடுத்த பதிலடி; நாட்டின் பாதுகாப்பு; பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை, பா.ஜ., பட்டியலிடுகிறது.ஆனால், மாநிலத்தை ஆளும் காங்., பிரசாரம், வேறு விதமாக உள்ளது. பா.ஜ., அரசின் செயலற்ற தன்மை; செல்லாத நோட்டு விவகாரத்தில் மக்கள் பட்ட துன்பம்; பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் போன்றவற்றை, சாதாரண மக்களும் புரியும் விதத்தில், காங்., பிரசாரம் செய்கிறது.

கடந்த தேர்தலில் அமோகமாக வந்த, ஆம் ஆத்மி, இந்த தேர்தலில், கட்சியினர் இடையே ஒற்றுமை இல்லாததாலும், தலைவர்கள் பலர் ஓடி விட்டதாலும், சோர்ந்து போயுள்ளது; எனினும், சிரோன்மணி அகாலி தளம் மற்றும், பா.ஜ.,வினர் மீது, கடும் தாக்குதலை தொடுத்து வருகிறது.குறிப்பாக, சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் தலைவரான, பிரகாஷ் சிங் பாதல் குடும்பத்தினரின் அத்துமீறல்கள், சொத்துக்குவிப்பு போன்றவற்றை சாடுகிறது.இந்நிலையில், இந்த மூன்று கட்சிகளுடன், நான்காவது அணியாக கருதப்படும், பஞ்சாப் ஏக்தா கட்சி, பஞ்சாப் ஜனநாயக கட்சி, பகுஜன் சமாஜ் போன்ற குட்டிக் கட்சிகளின் கூட்டணியும், முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இந்த மாநிலத்தில், 32 சதவீதமாக இருக்கும், தலித் மக்களின் ஓட்டு வங்கியாக, பகுஜன் மற்றும் அதனுடன் கூட்டணியில் இணைந்துள்ள சில கட்சிகள் கருதப்படுகின்றன. எனவே, நான்கு முனைப் போட்டி,பஞ்சாபில் நிலவுகிறது.இதனால், காங்கிரசுக்கு தான் நன்மை கிடைக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. அகாலி தளம் மற்றும் ஆம் ஆத்மியிலிருந்து வெளியேறிய தலைவர்கள், இந்த நான்காவது அணியில் இணைந்துள்ளதால், இவர்களுடன், காங்கிரஸ் தலைவர்கள் நெருக்கம் காண்பிக்கின்றனர்.அதற்கு ஏற்ப, மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசும், தலித் மற்றும் பிற பிரிவினருக்கு ஏராள மாக பயிர்க்கடன் மற்றும் பிற உதவிகளை செய்துள்ளது.இது, ஓட்டாக பிரதிபலிக்கும் என்ற எண்ணம், பொதுவாக இங்கு நிலவுகிறது.

Read 26 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…