JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

கிரண்பேடி மன்னிப்பு கேட்க தி.மு.க., 24 மணி நேர, 'கெடு'

'தமிழர்களின் உணர்வோடு விளையாடிய, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, 24 மணி நேரத்தில், மன்னிப்பு கேட்க வேண்டும்' என, தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில், எச்சரிக்கை விடுக்கப்பட்டது.'சென்னையில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு, மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவைகளுடன், மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகுமுறையும் காரணம்' என, புதுச்சேரி கவர்னர், கிரண்பேடி கருத்து தெரிவித்திருந்தார்.கவர்னரின் கருத்தை கண்டித்து, புதுச்சேரியில் நேற்று, தி.மு.க., சார்பில், கவர்னர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.புதுச்சேரி மாநில பொறுப்பாளர் சபாபதி மோகன் பேசுகையில், ''நியமனம் மூலம் பதவிக்கு வந்த கிரண்பேடி, பதவிக்கும், பட்டத்திற்கும் பணிவாக இருப்பதுதான் அழகு.உங்களுக்கு, 24 மணி நேரம் கெடு தருகிறோம். தமிழக மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள். இல்லா விட்டால், தி.மு.க., வின் போராட்டம் தொடரும்,'' என்றார்.சிவா எம்.எல்.ஏ., பேசுகையில், 'தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கா விட்டால், ராஜ்நிவாசை விட்டு, கவர்னர் வெளியில் வர முடியாது' என, எச்சரிக்கை விடுத்தார்.

Read 146 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…