JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

சோனியா தலைமையில் இன்றைய காங்கிரஸ் ???

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் விலகிய பிறகு சில மாதங்கள் வரை யாருமே அந்த பதவிக்கு நியமிக்கப்படவில்லை. கடைசியில் தற்காலிக தலைவராக சோனியாவே மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.தோல்வியால் துவண்டு போயுள்ள கட்சிக்கு சோனியாவின் வரவு புத்துணர்வை ஏற்படுத்தும் என தொண்டர்களும் 'சீனியர்' தலைவர்களும் எதிர்பார்த்தனர்.ஆனால் சோனியா வந்த பிறகு ராகுலுக்கு நெருக்கமான மாநில தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். ஹரியானாவில் மாநில காங். தலைவராக இருந்த ராகுல் ஆதரவாளரான அசோக் தன்வர் மாற்றப்பட்டு குமாரி செல்ஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ஹரியானா காங்கிரசில் ஏற்கனவே உள்ள கோஷ்டி பூசல் இன்னும் அதிகமாகி விட்டது.ஹரியானாவில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 90 எம்.எல்.ஏ.க்கள் உள்ள இந்த சட்டசபையில் காங்கிரசுக்கு இப்போது 15 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த கோஷ்டி பூசலுக்கு பிறகு காங்கிரஸ் 10 தொகுதிகளில் கூட தேறாது என்கின்றனர் சீனியர் தலைவர்கள்.இன்னொரு பக்கம் மத்திய பிரதேசத்திலும் பிரச்னை. இங்கு முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. காங்.கின் இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா ம.பி.

மாநில காங். தலைவராக விரும்புகிறார். ஆனால் கமல்நாத் அவரை எதிர்க்கிறார்.இது போதாதென்று சீனியர் தலைவரான திக்விஜய் சிங் மாநில அமைச்சர்களிடம் அடிக்கடி 'அதை செய் இதை செய்' என உத்தரவிடுகிறார். இது அமைச்சர்கள் மத்தியில் புகைச்சலை கிளப்பியுள்ளது.

மஹாராஷ்டிராவிலும் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பா.ஜ. - --சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்குள்ள பல காங். தலைவர்கள் பா.ஜ.விலும் சிவசேனாவிலும் ஐக்கியமாகி விட்டனர். காங்கிரசுக்கு வழிகாட்ட இங்கு எந்த தலைவரும் இல்லை.காங்கிரசின் நட்பு கட்சியான சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் என்ன செய்வது என தள்ளாடிக் கொண்டிருக்கிறது.இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரசுக்கு பல பிரச்னைகள். 'சோனியா தலைவராக வந்தால் எல்லாம் சரியாகி விடும் என நினைத்தோம்; ஆனால் நிலைமை படு மோசமாகி விட்டது' என நொந்து போயுள்ளனர் காங்கிரசார்.

Read 48 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…