JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

அதிமுக - பாஜக உறவில் சிக்கல்

அ.தி.மு.க., - பா.ஜ., இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலுக்காக கசப்பை மறந்தாலும், கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம், இரு கட்சியிலும் ஏற்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், அ.தி.மு.க., தலைமையில், கூட்டணி அமைந்தது. இக்கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகள் இடம் பெற்றன. பா.ஜ.,வுக்கு ஐந்து இடங்களை மட்டுமே, அ.தி.மு.க., ஒதுக்கியது. அதுவும் கேட்ட தொகுதிகளை, அ.தி.மு.க., வழங்கவில்லை. கணிசமான ஓட்டுகள் இது, பா.ஜ., நிர்வாகிகளிடம், கசப்பை ஏற்படுத்தியது. தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும், பா.ஜ., தோல்வியை தழுவியது. கோவையில் தோல்விக்கு, அமைச்சர்களே காரணம் என, பா.ஜ., நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். அடுத்து, வேலுார் லோக்சபா தேர்தல் வந்தது. அ.தி.மு.க., சார்பில், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். பிரசாரத்திற்கு, பா.ஜ., தலைவர்கள் அழைக்கப்படவில்லை. தீண்டத்தகாத கட்சியாக, தங்களை பார்ப்பதை, பா.ஜ., விரும்பவில்லை.

தற்போது, விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு, வரும், 21ல் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. நாங்குநேரி தொகுதியில், பா.ஜ., போட்டியிட விரும்பியது; அ.தி.மு.க., விரும்பவில்லை. இரு தொகுதிகளுக்கும், வேட்பாளர்களை அறிவித்ததுடன், தே.மு.தி.க., - பா.ம.க., தலைவர்களை சந்தித்து, அமைச்சர்கள் ஆதரவு கோரினர். பா.ஜ.,வுக்கு மாநில தலைவர் இல்லாததால், அக்கட்சியினரை சந்திக்கவில்லை என, காரணம் கூறினர்.

நாங்குநேரியில், பா.ஜ.,விற்கு கணிசமானஓட்டுகள் உள்ளன. இதை அறிந்தும், அ.தி.மு.க., பாராமுகமாக இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க.,விற்கு எதிரான கருத்துகளை, பா.ஜ., தலைவர்கள் வெளியிடத் துவங்கினர். தங்கள் ஆதங்கத்தை, தேசிய தலைமைக்கு தெரியப்படுத்தினர்.

இதை அறிந்த, அ.தி.மு.க., அவசரமாக, பா.ஜ., தேசிய தலைவர்களை தொடர்பு கொண்டு பேசியது; சமாதான முயற்சி நடந்தது. சென்னை ஐ.ஐ.டி., விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடி வந்தபோது, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அனைவரும் வரவேற்க சென்றனர். ஊழல் குற்றச்சாட்டு அதன் தொடர்ச்சியாக, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், தமிழக பா.ஜ., அலுவலகம் சென்று, நிர்வாகிகளை சந்தித்து, ஆதரவு கோரினார். தற்போதைக்கு பூசல் முடிவுக்கு வந்துள்ளது.

எனினும், பா.ஜ.,வுடன் அதிகம் நெருக்கம் காட்டினால், தேர்தலில் பின்னடைவு ஏற்படுமோ என்ற சந்தேகம், அ.தி.மு.க.,விற்கு உள்ளது. அ.தி.மு.க., அரசு மீது, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே, அ.தி.மு.க.,வை தவிர்த்து, தனித்து களம் இறங்கினால், மக்கள் ஆதரவை பெற முடியும் என்ற குரல், பா.ஜ.,வில் ஒலிக்க துவங்கி உள்ளது. எனவே, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, நீருபூத்த நெருப்பாகவே உள்ளது. உள்ளாட்சி தேர்தலில், கூட்டணி தொடருமா என்ற சந்தேகம், இரு தரப்பினருக்கும் ஏற்பட்டு உள்ளது. அதனால், அமைச்சர் ஜெயகுமார் சந்திப்புக்கு பின், முன்னாள் மத்திய பா.ஜ., அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடரும் எனக்கூற, மறுத்து விட்டார்.

Read 25 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…