JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

நடிகை ரேவதி உள்ளிட்ட பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கு திடீர் ரத்து

நடிகை ரேவதி, இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட, 49 பிரபலங்கள் மீது பதிவு செய்யப்பட்டிருந்த தேச துரோக வழக்கை ரத்து செய்வதாக, பீஹார் போலீசார் அறிவித்துள்ளனர். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள முஜாப்பர்பூர் நீதிமன்றத்தில், சுதிர்குமார் என்றவக்கீல் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த கும்பல் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தும், அதை தடுக்கக் கோரியும், திரைப்பட இயக்குனர்கள் மணிரத்னம், அனுராக் காஷ்யப், நடிகை ரேவதி, வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட, 50 பேர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இது தொடர்பாக பத்திரிகைகளுக்கும், அவர்கள் பேட்டி கொடுத்தனர். இதன்மூலம், நம் நாட்டிற்கும், பிரதமரின் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி விட்டனர். எனவே, அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து,நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,பிரபலங்களுக்கு எதிராக தேச துரோக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதற்கு, நாடு முழுதும் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து, இந்த வழக்கை ரத்து செய்வதாக, முஜாப்பர்பூர் போலீஸ் உயரதிகாரி மனோஜ் குமார் சின்கா, நேற்று அறிவித்தார். அவர் கூறுகையில், ''இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தினோம். அதில், இந்த புகாரை உறுதி செய்வதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பதும், தவறுதலாக புகார் கொடுக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனால், இந்த வழக்கை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

Read 17 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…