JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

தில்லி : கேஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் ஊழல் வழக்கில் கைது

டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளர் அலுவலகம் உள்பட தலைமை செயலக வளாகத்தில் பல இடங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.

பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின்படியே தனது அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். இதனை மறுத்த சி.பி.ஐ., முதல்–மந்திரி அலுவலகத்தில் சோதனை நடத்தவில்லை. முதல்–மந்திரியின் முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார் அலுவலகத்தில் தான் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. கூறியது.

அன்றைய தினமே அரசு அதிகாரிகளான இந்திய நுண்ணறிவு தகவல் தொடர்பு நிறுவனத்தின் (ஐ.சி.எஸ்.ஐ.எல்.) நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.கவுஷிக், முன்னாள் இயக்குனர்கள் ஏ.கே.துக்கல், ஜி.கே.நந்தா, என்டீவர் சிஸ்டம்ஸ் என்ற தனியார் நிறுவன இயக்குனர்கள் சந்தீப்குமார், தினேஷ் கே.குப்தா மற்றும் சிலர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

குற்றச்சதி, தவறான நடவடிக்கை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில், நேற்று டெல்லி முதல்–மந்திரியின் முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமாரை சி.பி.ஐ. ஊழல் வழக்கில் கைது செய்தது. அவருக்கு உறுதுணையாக இருந்ததாக அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனத்தினர் 4 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

 இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கூறும்போது, ‘‘ராஜேந்திரகுமார் டெல்லி அரசின் பல்வேறு பதவிகளில் பணியாற்றி உள்ளார். 2007 முதல் 2014–ம் ஆண்டு வரை அவர் வகித்த பதவிகளில் இருந்தபோது ரூ.50 கோடிக்கு மேல் மதிப்புள்ள அரசு பணிகளை முறைகேடாக என்டீவர் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார்.

இதற்கு சில அதிகாரிகளும் அவருக்கு உடந்தையாக இருந்துள்ளனர். டெல்லி அரசுக்கு இதனால் ரூ.12 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு ரூ.3 கோடிக்கு மேல் லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது’’ என்றனர். 

Read 305 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…