JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

பாரதீய ஜனதாவின் ஆட்டுவிப்பில் அதிமுக : பன்னீரின் கை ஓங்குகிறது !!

பொதுக்குழுவை எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் நடத்தி முடிக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள் அ.தி.மு.க சீனியர்கள். கடந்த மூன்று நாட்களாக எந்தவித ரெய்டும் இல்லாததால் கார்டன் வட்டாரத்தில் நிம்மதி ஏற்பட்டுள்ளது.Image result for aiadmk sasikala - panneerselvam images cartoons

. ' சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் கட்சியிலும் ஆட்சியிலும் நீடிப்பதை பா.ஜ.க தலைமை ஏற்றுக் கொள்ளவில்லை. முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனைக்கே சிக்கல் வரவும் வாய்ப்புள்ளது' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.

இப்போது சசிகலாவுக்கு கூடுதல் தலைவலியாக இருப்பது ஆடிட்டர் குருமூர்த்தியின் அதிரடிகள்தான். ' சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்றால், அ.தி.மு.க அழிந்துவிடும்' என பகிரங்கமாக பேசி வருகிறார் அவர். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் ஊழல்களைத் தட்டிக் கேட்க அவர் தயங்கியதில்லை.

ப.சிதம்பரம் முதற்கொண்டு தயாநிதி மாறன் வரையில் சட்டரீதியாகவே அவர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருபவர். தற்போது சசிகலாவுக்கு எதிராக அவர் பேசும் அதிரடிகளை, எதிர்கொள்ள வழிதெரியாமல் கார்டன் வட்டாரத்தில் உள்ளவர்கள் திணறி வருகின்றனர்" என்றார் விரிவாக. " தமிழகத்தின் முதலமைச்சராக ஏற்கெனவே இரண்டு முறை பதவி வகித்தவர் என்ற முறையிலும் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக ஓ.பன்னீர்செல்வம் இருந்ததாலும் ஆட்சியில் அவர் தொடர்வதையே டெல்லி தலைமை விரும்புகிறது.

முதல்வருக்கும் சசிகலா உறவினர்களுக்கும் உள்ள இடைவெளியையும் அவர்கள் கவனித்து வருகிறார்கள். ' முதல்வர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ்ஸை அவ்வளவு எளிதாக அகற்றிவிட முடியாது. Image result for aiadmk sasikala - panneerselvam images cartoons

அவரே பதவியில் தொடர்வார். தமிழ்நாட்டில் சசிகலா குடும்பத்துக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை' என அதிரடியாகப் பேசியிருக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி.

இதுகுறித்து, பா.ஜ.க தலைவர் அமித் ஷாவிடமும் தமிழகத்தின் பிரதிநிதிகள் சிலர் பேசியுள்ளனர். ' நமக்கு எதிராகப் பேசுபவர்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். காங்கிரஸ் உள்பட தமிழ் அமைப்புகள்தான் அவர்களுக்கு ஆதரவாக பேசுகின்றன. வரியை ஏய்த்து ஊழலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்' எனக் கூறியிருக்கிறார்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த விவகாரத்தில் அப்போலோ மருத்துவமனைக்கே சிக்கல் வரவும் வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து கிளம்பும் எதிர்ப்புகளையெல்லாம் டெல்லி தலைமை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை" என்கின்றனர் பா.ஜ.க பிரமுகர்கள் சிலர். 

அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் பதவியில் இருப்பவர்தான், இதுவரையில் முதலமைச்சராகவும் இருந்து வந்திருக்கிறார். அந்த வகையில், ' இப்போதுள்ள கிடைத்துள்ள வாய்ப்பு மீண்டும் ஒருமுறை வந்துவிடாது. சின்னம்மா விரைவில் முதல்வர் ஆக வேண்டும்' என கோட்டையை நோக்கி பார்வை பதித்துள்ளனர் மன்னார்குடி உறவுகள்.

' அவ்வளவு எளிதில் பதவியை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது' என்பதில் உறுதியாக இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இருவருக்கும் இடையில் வருமான வரித்துறையின் வாகனம் தயாராகவே காத்திருக்கிறது. அடுத்தகட்ட காட்சிக்காக காத்திருக்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள்.

Read 1014 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…