JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

அதிமுக பொதுக்குழுவும் 14 தீர்மானங்களும்

இன்று நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக் குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். அதைத்தொடர்ந்து அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவற்றின் விவரங்கள்: 1. வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டிருக்கும் அனைத்திந்திய அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மண் உலகை விட்டுப் பிரிந்து சென்றமைக்கு இரங்கல் !

2. அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில், அவருக்காக மனம் உருகி பிரார்த்தனை செய்த கோடானு கோடி மக்களுக்கும், நேரில் வந்து நலம் விசாரித்துச் சென்ற அனைத்துத் தரப்பினருக்கும் நெஞ்சார்ந்த நன்றி !

3. அதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டிக் காத்து வளர்த்திட ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு தியாகங்களுக்கு வீர வணக்கம்!

4. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழ்நாடு முதல்வராகப் பணியாற்றி மக்களுக்கு செய்துள்ள அரும் தொண்டுகளுக்கு புகழ் அஞ்சலி!

5. அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா விண்ணுலகம் சேர்ந்த நிலையில், அதிமுகவை காப்பாற்றவும், வழி நடத்தவும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் நியமனத்திற்கு பொதுக்குழுவின் ஒப்புதல்!

6. அ) அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் பங்கு கொண்ட குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக ஆளுநர், கேரள ஆளுநர், பல மாநிலங்களின் முதல்வர்கள், தங்கள் மாநிலம் சார்பாக பிரதிநிதிகளை அனுப்பிய முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பன்னாட்டுத் தூதரகங்களின் பிரதிநிதிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், திரைஉலகப் பிரமுகர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரமுகர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி! இறுதி அஞ்சலி மற்றும் இறுதி ஊர்வல ஏற்பாடுகளை செவ்வனே செய்து கொடுத்த அரசு நிர்வாகத்திற்கும் நன்றி!

ஆ) எம்ஜிஆரின் நினைவிடத்திலேயே ஜெயலலிதாவுக்கும் நினைவிடம் அமைக்க, சின்னம்மா விடுத்த வேண்டுகோளை ஏற்று தேவையான அனுமதிகளையும், ஏற்பாடுகளையும் அளித்த தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் நன்றி !

7. ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடனுக்குடன் செய்து கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி !

8. முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து விடுத்த அன்பு வேண்டுகோளை ஏற்று, அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிகளில் ஜெயலலிதா கேட்க விரும்பிய, வெற்றிச் செய்தியை வழங்கிய வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி !

9. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை `தேசிய விவசாயிகள் தினம் என்று அறிவிக்கவும்; பாராளுமன்றத்தில் ஜெயலலிதாவின் திருவுருவ வெண்கலச் சிலையை நிறுவவும் மத்திய அரசுக்கு கோரிக்கை !

10. செயற்கரிய செயல்கள் பலவற்றை பார் போற்றும் வகையில் செய்து காட்டிய சமூக நீதி காத்த வீராங்கனையும், மகளிர் குல திலகமும் ஆன ஜெயலலிதாவுக்கு `பாரத் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை !

11. எல்லோருக்கும் எப்பொழுதும் சத்தான உணவு என்பது சாத்தியமான லட்சியமே என்பதை மெய்ப்பித்த ஜெயலலிதாவுக்கு, மானுட சேவைக்கான பிலிப்பின்ஸ் நாட்டின் ரமோன் மக்சைசாய் விருது மற்றும் உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட ஏற்பாடுகளைச் செய்தல் !

12. அதிமுக நிறுவனத் தலைவர், எம்ஜிஆரின் பிறந்த நாள் நூற்றாண்டினை, ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடையும் வண்ணம், மக்கள் பணி ஆண்டாகத் தொண்டாற்ற அழைப்பு

13. ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா நினைவு நாளில் கழகத் தொண்டர்கள் அனைவரும், கழகத்தின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு உழைத்து, எதிரிகளை வீழ்த்தி, முன்னேற்றப் பாதையில் நடை போட ஜெயலலிதா மீது ஆணையாக உறுதிமொழி ஏற்றல் !

14. ஜெலலிதாவின் வழிகாட்டுதல்களை நினைவில் கொண்டு, மதிப்பிற்குரிய சின்னம்மா அவர்களுடைய தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதி ஏற்றல் !

Read 227 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…