JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

அம்பலமாகும் கேஜ்ரிவாலின் ஊழல்கள் : தில்லி அரசுக்கு நெருக்கடி

டில்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மீதான ஊழல்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஷூங்குலு கமிட்டி அறிக்கை அம்பலத்திற்கு வந்துள்ளது. இதன் முழு அறிக்கை விவரங்களை நாளை ( 6-ம் தேதி) காங்.வெளியிட திட்டமிட்டுள்ளதால் கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.

டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். டில்லி துணை நிலை கவர்னராக நஜிப் ஜூங் இருந்த போது, பல்வேறு அரசு நியமனங்கள் விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கும், நஜிப் ஜூங்கிற்கும் முட்டல் மோதல் இருந்து வந்தது. அப்போதே கெஜ்ரிவால் அரசு மீது பல்வேறு ஊழல் புகார்களும் எழுந்தன. 

இது குறித்து விசாரிக்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், முன்னாள் சி.ஏ.ஜி. தலைவர் வி.கே.ஷூங்குலு தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவை , அப்போதைய துணை நிலை கவர்னர் நஜிப் ஜூங் நியமித்தார். மொத்தம், 414 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 114 பக்க விசாரணை அறிக்கையில், ஆம் ஆத்மி ஆட்சியில் அரசு அதிகாரிகள் நியமனம் முதல் டெண்டர் வரையில் பெருமளவு ஊழல் நடந்துள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது.

இதன் அறிக்கை விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்ற காங். மூத்த தலைவர் அஜெய் மக்கான், தனது டுவீட்டரில் கூறியது, அறிக்கையின் முழு விவரங்களை நாளை பகிரங்கமாக வெளியிடுவேன். இதன் மூலம் ஊழலை ஒழிப்பதாக ஆட்சியை பிடித்த கெஜ்ரிவாலின் முகத்திரையை கிழிப்பேன் என்றார்.

ஷூங்குலு கமிட்டி அறிக்கை விவகாரத்தால், டில்லி ஆம் ஆத்மி ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படலாம் என தெரிகிறது. இதனால் கெஜ்ரிவால் அரசுக்கு கடும் நெருக்கடி முற்றி வருகிறது. ஏற்கனவே பா.ஜ. ,-ஆம் ஆத்மி இடையே பனிப்போர் நடந்து வரும் நிலையில் ஷூங்குலு அறிக்கை மூலம் கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி கொடுக்க பா.ஜ.விற்கு நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Read 294 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…