JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  : டி.டி.வி. தினகரனுக்கு நடிகர் சரத்குமார் ஆதரவு :
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. (அம்மா) வேட்பாளர் டி.டி.வி.தினகரனை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பிரசாரம் செய்யப்போவதாகவும் அவர் கூறினார்.
 
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. (அம்மா) சார்பில் வேட்பாளராக டி.டி.வி.தினகரன் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று மாலை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் சென்று, ஆதரவு தெரிவித்தார். டி.டி.வி.தினகரன், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு ஆர்.சரத்குமார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
 
அப்போது, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, காமராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Read 307 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…