JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

சிறை விதிகளை மீறிய சசிகலா மீது நடவடிக்கை ?

ஜெயலலிதாவின் தோழி சசிகலா, வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக சொத்துக்கள் சேர்த்ததாக சுப்ரீம் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டுள்ளார்.

4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட அவர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் அவரது உறவினர் இளவரசியும் அதே சிறை அறையில் உள்ளார்.

சசிகலாவுக்கு கைதி எண். 9234 வழங்கப்பட்டுள்ளது. சிறையில் அவருக்கு வி.வி.ஐ. பி.க்களுக்கு உரிய எந்த சலுகைகளும் வழங்கப்பட வில்லை என்று அதிகாரிகள் கூறினார்கள்.
சிறை விதிகளுக்கு உட் பட்டே அவர் நடத்தப்படு கிறார் என்று சிறைத்துறையினர் தெரிவித்தனர். ஆனால்  சிறை விதிகளை சசிகலா மீறி  விட்டதாக புகார்கள் எழுந்துள்ளது.

கர்நாடகா மாநில சிறைத் துறை விதிப்படி ஒரு கைதி தனது வக்கீல், உறவினர்கள் மற்றும் நண்பர்களை 15 நாட்களுக்கு ஒரு தடவைதான் சந்தித்து பேச  முடியும். ஆனால் கடந்த  பிப்ரவரி மாதம் 16-ந்தேதி முதல் மார்ச் மாதம் 18-ந்தேதி வரை 31 நாட்களில் சசிகலா 28 பேரை சந்தித்து பேசி இருப்பது சிறைத் துறை ஆவணங்கள் மூலம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

நரசிம்மமூர்த்தி எனும் சமூக சேவகர் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி மத்திய சிறை துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களும், சசிகலா சிறையில் விதிகளை மீறி இருப்பதை உறுதிப் படுத்தி உள்ளது. ஒவ்வொரு பார்வையாளருடனும் சசிகலா சராசரி யாக 40 நிமிடங்கள் வரை பேசி உள்ளார். பெரும்பாலானவர்களை அவர் சிறையில் உள்ள சிறப்புப் பகுதியில் சந்தித்துப் பேசியதாக தெரிய வந்துள்ளது. சிறைத் துறை உயர் அதிகாரிகள் மூலம் இதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக கர்நாடகா மாநில சிறைத் துறை உயர் அதிகாரிகள் பலரிடம் கேட்டபோது மேற்கொண்டு எந்த தகவலும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

இதற்கிடையே சிறையில் சசிகலாவை சந்தித்து யார்-யார்? பேசினார்கள் என்ற விபரம் வெளியிடப் பட்டுள்ளது. அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிப்ரவரி 20 மற்றும் மார்ச் 8-ந்தேதி என இரண்டு தடவை சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். இரண்டு தடவையும் அவர் சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் பேசியதாக தெரிகிறது.

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, சசிகலா உறவினர்கள் விவேக், கார்த்திகேயன் மற்றும் வக்கீல்களும் சந்தித்தவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. மகுந்த சீனிவாசலு ரெட்டியும் சசிகலாவை ஒரு தடவை சந்தித்து பேசியுள்ளார்.

சசிகலாவுடன் அவர் கடந்த மாதம் 1-ந்தேதி சந்தித்து பேசியதாக சிறைத் துறை குறிப்பேட்டில் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காக அவர் சிறையில் உள்ள சசிகலாவுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் இருவரும் 20 நிமிடம் பேசி உள்ளனர்.

சசிகலாவுடன் ஒரே அறையில் இருக்கும் இளவரசி இந்த கால கட்டத்தில் 4 தடவை மட்டுமே உறவினர்களை சந்தித்து பேசி உள்ளார். மற்றொரு கைதியான சுதாகரன் ஒரே ஒரு தடவை தனது பெங்களூர் வக்கீலை சந்தித்து பேசியுள்ளார்.

சசிகலா 31 நாட்களில் 28 பேரை சந்தித்து பேசியது சிறைத் துறை விதிப்படி விதி மீறலாகும். உயர் அதிகாரிகள் கவனத்துக்கு வராமல் சசிகலாவுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டதா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால் சசிகலா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக கர்நாடகா மாநில  சிறைத் துறையினர் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

Read 296 times Last modified on வியாழக்கிழமை, 06 ஏப்ரல் 2017 22:03
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…