JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

உள்ளே நடந்த தில்லு முல்லுகள் : சசிகலா வேறு சிறைக்கு மாற்றம் !!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.,வின் சசிகலாவை, கர்நாடகாவில் உள்ள வேறு சிறைக்கு மாற்றலாமா என்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், பெங்களூரு சிறை விவகாரம் பற்றி பேச உயர் அதிகாரிகளுக்கு, முதல்வர் சித்தராமையா தடை விதித்துள்ளார். 

இதற்கிடையில், சிறையில் சொகுசு வசதிகள் வழங்கப்பட்டது குறித்து டி.ஐ.ஜி., ரூபாவிடம் தகவல் கொடுத்த கைதிகள் 32பேர் பலமாக தாக்கப்பட்டதுடன் வேறு சிறைகளுக்கும் மாற்றப்பட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைதண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ள அ.தி.மு.க.,வின் சசிகலா, சிறையில் சொகுசு வசதிகள் பெற வேண்டும் என்பதற்காக இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா வெளியிட்ட தகவலால் கர்நாடக அரசே ஆடிப் போயுள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு விரைவில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் நேரத்தில், சிறை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, முதல்வர் கடுமையாக கண்டித்துள்ளார். 

சிறைக்குள் தனி அலுவலகம் இருந்ததாகவும், அவர் அவ்வப்போது வெளியே சென்று வந்ததாகவும், கூறப்படுகிறது. தற்போது மீண்டும் சசிகலாவின் பெயர் அடிபட தொடங்கிவிட்டது. லஞ்சம் வாங்கி சிறைக்கு செல்வது வழக்கம், ஆனால் இவரோ சிறைக்கு சென்ற பிறகும் லஞ்சம் கொடுத்து வருவது வேடிக்கையாக உள்ளது. Image result for sasikala in bangalore jail images photos cartoons

பெங்களூரு சிறைவிவகாரம் குறித்து, எந்த அதிகாரியும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கக் கூடாது என தடை விதித்துள்ளார். இதற்கிடையில் சிறையில் நடந்த முறைகேடு கள் குறித்து டி.ஐ.ஜி., ரூபாவுக்கு தகவல் தெரிவித்ததாக ஆயுள் தண்டனை கைதி கள் 32 பேர் சிறை அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டனர். அவர்களை அழைத்து அதிகாரி கள் சரமாரியாக அடித்து உதைத்ததாக தெரிகிறது.

 

இதன்பின், அந்த கைதிகளை இடமாற்றுவது குறித்து உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை யில் ஈடுபட்டனர். பகல் நேரத்தில் வெளியில் அனுப்பினால் பிரச்னை எழும் என்பதால் இரவு நேரத்தில் அனுப்ப முடிவு செய்து நேற்று முன் தினம் நள்ளிரவே 'முறையான கவனிப்பு'க்கு பின், மாநிலத்திலுள்ள பல சிறைகளுக்கு 32 கைதிகளையும் பிரித்து அனுப்பினர்.

இந்நிலையில் சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். ஏற்கனவே சென்னையை சேர்ந்த 'டிராபிக்' ராமசாமி 'சசிகலாவை தமிழக அமைச்சர்கள் அடிக்கடி சந்திக்கின்றனர். அதனால் அவரை துமகூரு மகளிர் சிறைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்' என கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

'விதிமுறைப்படி தான், சசிகலாவை சந்திக்க அனுமதி தரப்படுகிறது' என அரசு தரப்பில் கூறியதையடுத்து, அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.சிறைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் கூறுகையில் 'சசிகலாவை பெங்களூரு சிறையிலிருந்து கர்நாடகத்தின் எந்த சிறைக்கு வேண்டுமானா லும் மாற்றலாம்.

துமகூருவில் மகளிர் சிறை இருப்பதால் அங்கு மாற்றுவது சரியாக இருக்க வாய்ப்புள்ளது. இடமாற்றத்துக்கு எந்த காரண மும் சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்றார். சிறையில் நடந்த முறைகேடுகள் குறித்து மாநில அரசின் அதிகாரிகள் குழு இன்று விசார ணையை துவக்குகிறது. இந் நிலையில் டி.ஐ.ஜி., ரூபாவை வேறு இடத்துக்கு துாக்கியடிக்க லாமா என்பது குறித்து, முதல்வர் சித்தராமையா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Read 400 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…