JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

எதிரிக்கு எதிரி நண்பன் : கமலுக்கு ஓபிஎஸ் அணி ஆதரவு

தமிழக அரசு குறித்த கமலின் விமர்சனத்திற்கு தமிழக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஓபிஎஸ் அணியினர் ஆதரவாகப் பேசியுள்ளனர். 

தமிழகத்தின் அனைத்து துறையிலும் ஊழல் எனற கமல்ஹாசனின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி அணியின் அமைச்சர்கள் கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

கமல்ஹாசனுக்கு தைரியம் இருந்தால் அரசியலுக்கு வந்து கருத்துச் சொல்லட்டும் எனறு அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு ஒ.பன்னீர்செல்வம், ஜனநாயகத்தில் கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது என்று கூறியுள்ளார்.  

மேலும் ஓபிஎஸ் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி, கமல்ஹாசனின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டுமே தவிர, அவரை குறைசொல்லக்கூடாது. கமல்ஹாசனை குறை சொன்னால் அவர்களின் மரியாதைதான் குறையும் என்று கமல்ஹாசனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

Read 24 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…