JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

செப்டம்பர் 10 - தேதி ஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு

தினகரனை தொடர்ந்து, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினும், கவர்னரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். செப்., 10ல், கவர்னருடன் ,சந்திப்பு ஆக., 22ல், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக, கவர்னர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்தனர்.

இதையடுத்து,'பழனிசாமி அரசு பெரும்பான்மை இழந்து விட்டதால், சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்' என, ஸ்டாலின் எழுதிய கடிதம், கவர்னரிடம் வழங்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, சட்டசபை காங்கிரஸ் தலைவர், ராமசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர், ஜவாஹிருல்லா ஆகியோரும், கவர்னரை சந்தித்து, கடிதம் வழங்கினர்.

இந்நிலையில், நேற்று தினகரன் தலைமையில், அவரது ஆதரவு எம்பி., - எம்.எல்.ஏ.,க்கள், கவர்னரை சந்தித்து, மீண்டும் கடிதம் அளித்தனர். தற்போது, வரும், 10ம்தேதி, கவர்னரை சந்திக்க, ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அன்றைய தினம், சந்திக்க அனுமதி கேட்டு, கவர்னருக்கு, தி.மு.க., சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Read 281 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…