JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

ஆர்.கே.நகர் இடைதேர்தல் : உளவுத்துறை சர்வே : முந்தும் அதிமுக - சுணங்கும் திமுக

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு, 55 சதவீதம்; தி.மு.க.,வுக்கு, 40 சதவீதம்; தினகரனுக்கு, 3 சதவீதம் ஓட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக, உளவுத்துறை எடுத்துள்ள, 'சர்வே'யில் தெரிய வந்துள்ளது. Image result for r.k.nagar by -elections cartoons images

இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:ஜெயலலிதா மறைவுக்கு பின், ஏப்ரல், 12ல், ஆர்.கே.நகரில் நடக்க இருந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனன்; சசிகலா அணியில் தினகரன்; தி.மு.க., சார்பில் மருதுகணேஷ் போட்டியிட்டனர்.

அந்த தேர்தலில், தினகரனின், 'தொப்பி' சின்னம், அதிக ஓட்டுகளை பிரிக்க இருந்ததால், மதுசூதனனை வீழ்த்துவது, தி.மு.க.,வுக்கு சுலபமாக இருக்கும் என, அக்கட்சி எதிர்பார்த்தது. தற்போது, பன்னீர், பழனிசாமி அணிகள் ஒன்றிணைந்துள்ளன. இரட்டை இலை சின்னமும், அ.தி.மு.க.,வும், அவர்களுக்கு கிடைத்துள்ளது. தினகரன் அணியினருக்கு, களம் சாதகமாக இல்லை. இதனால், அ.தி.மு.க.,வுக்கு வெற்றி உறுதி என, கட்சியினர் நம்புகின்றனர்.

ஆளுங்கட்சியில், வேட்பாளர் தேர்வில் நீண்ட இழுபறிக்கு பின், மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.அதன்பின், தொகுதியில் உளவுத்துறை ரகசிய சர்வே எடுத்துள்ளது. அதில், 'பழனிசாமி ஆட்சி மீதான, அதிருப்தியை தாண்டி, அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கியில், 55 சதவீத ஓட்டுகளை பெற்று, மதுசூதனன் வெற்றி பெறுவார்' என, கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா, மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்தபோது நடந்த, அரவக்குறிச்சி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., 53 சதவீதம்; திருப்பரங்குன்றத்தில், 55 சதவீதம்; தஞ்சையில், 54 சதவீதஓட்டுகளை பெற்றுள்ளது. எனவே, ஆர்.கே.நகரிலும், 55 சதவீத ஓட்டுகளில் வெற்றி பெறும் என, கணக்கிடப்பட்டுள்ளது. அதே சமயம், இறுதிக்கட்ட பிரசாரத்திற்கு பின், மதுசூதனனுக்கு, தி.மு.க., வேட்பாளர் மருது கணேஷ் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது.

, ஏப்., மாதம், தி.மு.க.,வுக்கு, கூட்டணி கட்சிகளின் ஆதரவு பெரிய அளவில் இல்லை. தற்போது, தி.மு.க.,வுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு பலமாக உள்ளது. தினகரன், தீபா பிரிக்கும் ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. இருப்பினும், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில், தி.மு.க., 39 சதவீதம்; திருப்பரங்குன்றத்தில், 35 சதவீதம்; தஞ்சையில், 40 சதவீத ஓட்டுகளை பெற்றதுபோல், ஆர்.கே.நகரிலும், அக்கட்சி, 40 சதவீத ஓட்டுகளை பெற வாய்ப்பு உள்ளது.

தினகரனுக்கு, தற்போது ஆளுங்கட்சி ஆதரவு இல்லை. ஆர்.கே.நகரில், அவரது ஆதரவாளர்களில், வெற்றிவேலை தவிர, மற்ற நிர்வாகிகள் அனைவரும், பழனிசாமி அணியில் உள்ளனர். Image result for r.k.nagar by -elections  and two leaves symbol images photos

சமீபத்தில், திருச்சியில் நடந்த, தினகரன் அணி மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் பங்கேற்க சென்ற, ஆர்.கே.நகர் பகுதி செயலர், சந்தானம், கார் விபத்தில் இறந்துவிட்டார். தற்போது, தினகரனின் ஆதரவாளர்களாக கருதப்படும், ஆர்.கே.நகர் தொகுதி வட்ட நிர்வாகி களுக்கு, ஆளுங்கட்சி தரப்பில் வலை வீசப்பட்டு உள்ளது.

எனவே, தினகரனிடம் எஞ்சியுள்ள ஆதரவாளர்களில், சிலர், 'ஸ்லீப்பர் செல்'களாக செயல்பட துவங்கியுள்ளனர்.அவர்களின் வாயிலாக, தினகரனை, 'டிபாசிட்' இழக்க வைக்கும் வியூகத்தையும், ஆளுங்கட்சி வகுத்துள்ளது.

இந்த முறை இரட்டை இலையை, தினகரன் எதிர்ப்பதால், அவருக்கு, 3 சதவீத ஓட்டுகள் தான் கிடைக்க வாய்ப்புள்ளதாக, சர்வே முடிவில் தெரிய வந்துள்ளது.இவ்வாறு ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறின. 

சுணங்கும் திமுக

கடந்த முறை, நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தலில் வெற்றி கட்டாயம் தமக்குத்தான் என்று நம்பி களம் இறங்கிய தி.மு.க.,வின் மருது கணேஷ், தற்போது லேசான பதட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல், கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினிடம் செல்ல, அவர், தமிழகம் முழுவதிலும் இருக்கும் கட்சியின் மாவட்டச் செயலர்கள் அவ்வளவு பேரையும், தேர்தல் பணியாற்றுவதற்காக, சென்னைக்கு வரச் சொல்லி இருக்கிறார்.

கிட்டதட்ட இருபத்தைந்து நாட்கள் வரை, சென்னையிலேயே தங்கியிருந்து தேர்தல் வேலை பார்க்க வேண்டும் என்பது அவரது உத்தரவு. ஒவ்வொரு மாவட்டச் செயலருக்கும், ஆர்.கே.நகர் தொகுதி பிரிக்கப்பட்டு, அவர்கள் மேற்பார்வையில் தேர்தல் பணிகளை ஒப்படைக்கச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.

இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், கட்சியின் மாவட்டச் செயலர்கள், தனது ஆதரவுப் பொடிகளுடன் சென்னை வந்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் ஒருவரது முகத்திலும், உற்சாகம் இல்லை. காரணம், தேவையில்லாமல், தொடர்ந்து செலவுகளையே கட்சித் தலைமை இழுத்து விடுகிறது.

தேர்தல் முடிந்த கையோடு, தமிழகம் முழுவதும், எழுச்சிப் பயணம் துவங்க விருக்கிறார் ஸ்டாலின். அதற்கும் நாங்கள்தான் செலவழிக்க வேண்டும். இப்படியே எவ்வளவு காலத்துக்கு செலவழிப்பது என்று கூறி புலம்புகின்றனர்.

இதனால், ஆர்.கே.நகருக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வந்திருக்கும் தி.மு.க., மாவட்டச் செயலர்கள், பெயருக்கு மட்டும், செலவில்லாமல் தேர்தல் பிரசாரம் செய்து விட்டு, ஊர் திரும்ப வேண்டும் என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Read 4851 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…