JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

டிசம்பர் 21 : திமுக அதிமுகவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாள்

அ.தி.மு.க., மற்றும், தி.மு.க., ஆகிய, இரு பெரும் திராவிட கட்சிகளின், எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நாளாக, டிச., 21 அமையப் போகிறது. அன்றைய தினம், '2ஜி' ஊழல் வழக்கில், டில்லி சிறப்பு நீதிமன்றம் கூறப்போகும் தீர்ப்பில், தி.மு.க.,வில், 'உள்ளே' செல்லப் போவது யார்; 'வெளியே' வரப் போவது யார் என்பது தெரிய வரும்.

அதேபோல், ஜெயலலிதா இல்லாத நிலையில், அ.தி.மு.க.,வுக்கு, சென்னை, ஆர்.கே.நகரில் நடக்கப் போகும் இடைத்தேர்தல், அமில சோதனையாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. Image result for 2 g spectrum case images photos

 எம்.ஜி.ஆர்., துவக்கிய, அ.தி.மு.க., அவர் காலத்தில், தமிழகத்தின் தனிப்பெருங் கட்சியாக உருவெடுத்தது; அதை, இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக ஜெயலலிதா உயர்த்தினார். அவரது மறைவு, தமிழக அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தியதுடன், அ.தி.மு.க.,வை உடைத்தது.

இப்போது, சசிகலா கும்பலை, பழனிசாமி - பன்னீர்செல்வம் முகாம்கள் ஒன்று சேர்ந்து ஒதுக்கி, இரட்டை இலை சின்னத்தை வசமாக்கிஉள்ளன. ஆனால், 'இரட்டை இலை சின்னத்தால் மட்டும், வெற்றி கிடைத்து விடாது' என, எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. அதற்கு, பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே ஏற்பட்டுள்ள புகைச்சல் மற்றும் அரசு மீது கூறப்படும் அடுக்கடுக்கான புகார்களையும், அரசியல் நோக்கர்கள் பட்டியலிடுகின்றனர்.

மேலும், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., போன்ற, மக்கள் செல்வாக்கு மிக்கவர்களால் தான், இரட்டை இலைக்கு வெற்றி கிடைத்து வந்ததாகவும், அவர்கள் கூறுகின்றனர். எனவே, டிச., 21ல் நடக்கும், இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு, இரட்டை இலை சின்னத்துக்கு, மக்களிடம் தற்போதும் செல்வாக்கு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தும். இந்த பலப்பரீட்சையில், ஒருவேளை தோற்றால், அது, அ.தி.மு.க.,வின் அஸ்தமனத்திற்கு துவக்கமாக அமையும்.

இதேபோல், தொடர் தோல்விகளாலும், கருணாநிதி உடல் நலம் குன்றியதாலும், இரண்டாவது பெரிய கட்சியான, தி.மு.க.,வின் தொண்டர்கள், உற்சாகம் இன்றி உள்ளனர்; அது, ஆர்.கே.நகர் களத்திலும் எதிரொலிக்கிறது. இத்தகைய சூழலில், தி.மு.க.,வின் தொடர் தோல்விகளுக்கு, முக்கிய காரணங்களில் ஒன்றான,

'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் தீர்ப்பு, டில்லி நீதிமன்றத்தில், டிச., 21ல்வெளியாகவுள்ளது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த, தெருமுனை பேச்சாளர்கள் முதல், பெரிய தலைவர்கள் வரை, தி.மு.க.,வை விமர்சிக்க, முக்கிய ஆயுதமாக, இந்த வழக்கை தான் பயன்படுத்துகின்றனர்.

தமிழக மக்கள் மனதிலும், 2ஜி ஊழல் என்றால், தி.மு.க., என, ஆழப்பதிந்து விட்டது. ஒருவேளை, இந்த வழக்கின் தீர்ப்பு, தி.மு.க.,வுக்கு எதிராக அமைந்தால், அந்த கட்சியின் அரசியல் எதிர்காலத்தில், இருள் சூழ்வது உறுதி. எனவே, தமிழகத்தை மாறி மாறி ஆட்சி புரியும், அ.தி.மு.க., மற்றும், தி.மு.க., ஆகிய திராவிட கட்சிகளுக்கு, வரும், 21, 'ஆசிட் டெஸ்ட்' எனப்படும் அமில சோதனையாக அமைவது உறுதி.  Image result for 2 g spectrum case images photos

ஆர்.கே.நகர் தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கும், டிச., 21 காலை, 10:30 மணிக்கு, '2ஜி' வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அப்போது, ஓட்டுப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கும். தி.மு.க.,வுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், அது, அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக மாற வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், தி.மு.க.,வுக்கு சாதகமாக அமைந்து விட்டால், ஜெ., இல்லாமல் பலவீனமாக காணப்படும், அ.தி.மு.க.,வுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசில், தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா,தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ஊழல் நடந்ததாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த ஊழல் காரணமாக, அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, அதில் தெரிவிக்கப்பட்டது.

 தீர்ப்பு தேதி எப்போது வெளியாகும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது தொடர்பான அறிவிப்பு, ஆறு முறை தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், நீதிபதி, ஓ.பி.சைனி, நேற்று கூறியதாவது:தீர்ப்பு எழுதும் பணி முழுவதுமாக நிறைவடைந்து விட்டது.

இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு, வரும், 21ம் தேதி அறிவிக்கப்படும். அன்று காலை, 10:30க்கு தீர்ப்பு வழங்கப்படும். வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும், அன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறினார்.

Read 1475 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…