JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

குஜராத்  தேர்தல் கருத்துக் கணிப்புகள் : சரிவை நோக்கி பாஜக

குஜராத்தில் 22 ஆண்டுகாலம் அசைக்க முடியாமல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் பாஜகவை கருத்து கணிப்பு முடிவுகள் ரொம்பவே அலறவிட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த 3 மாதங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் பாஜக படுமோசமான வீழ்ச்சியை நோக்கி சரசரவென இறங்கிப் போய்க் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தலில் வென்றாக வேண்டிய நெருக்கடியில் பாஜக இருக்கிறது. குஜராத் சட்டசபை தேர்தலை, ஒரு லோக்சபா தேர்தலைப் போல கருதுகிறது பாஜக. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் முழு வீச்சில் குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்டனர். குஜராத்தின் மகன் நான் என்கிற மண்சார்ந்த் முழக்கங்களை இறைஞ்சும் குரலில் எல்லாம் மோடி முன்வைத்திருக்கிறார்.

 ஆனால் கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்டு வரும் கருத்து கணிப்புகளோ பாஜக சடசடவென சரிவை நோக்கி வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாக இருக்கிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி ஏறுமுகத்தை நோக்கி வெற்றி நடைபோடுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சிஎஸ்டிஎஸ்- லோக்நிதி- ஏபிபி கருத்து கணிப்பு நடத்தியது. இதில், பாஜக 144 முதல் 152 இடங்களைக் கைப்பற்றும் என கூறப்பட்டிருந்தது. அதாவது தனிப்பெரும்பான்மைக்கும் மிக அதிகமான இடங்களைப் பாஜக பெறும் என்றது அக்கருத்து கணிப்பு. காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 26 முதல் 32 இடங்கள்தான் கிடைக்கும் என்றது அக்கருத்து கணிப்பு. 

இதேபோல் நவம்பர் மாதம் நடத்தப்பட்ட சிஎஸ்டிஎஸ்- லோக்நிதி- ஏபிபி கருத்து கணிப்பில் இன்னும் சற்று குறைவாக 113- 121 இடங்களில்தான் பாஜக வெல்லும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸுக்கு ஏறுமுகமாக 58 முதல் 64 இடங்கள் கிடைக்கும் என்றது கருத்து கணிப்பு.

தற்போது நடத்தப்பட்ட கருத்து கணிப்பிலோ பாஜகவுக்கு 91 முதல் 99 இடங்கள்தான் கிடைக்குமாம். காங்கிரஸுக்கோ 78-86 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக இக்கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. மேலும் இரு கட்சிகளுமே தலா 43% வாக்குகளைப் பெறும் என்றும் இக்கருத்து கணிப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Read 23 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…