JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் : இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ர்கே நகர் தேர்தலில், இறுதி வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டது. 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இதில், விஷால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஆர்கே நகர் தேர்தல், டிச.,21ல் தேர்தல் நடக்க உள்ளது. திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேட்சை வேட்பாளராக தினகரன், பா.ஜ.,வின் கரு.நாகராஜன், நடிகர் விஷால், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா உள்ளிட்ட பலர் ஆகியோர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு பரிசீலனையின் போது, தீபா, நடிகர் விஷால் உள்ளிட்ட 73 பேரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 72 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.

வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. அப்போது சுயேட்சை வேட்பாளர்கள் 13 பேர் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்று கொண்டனர். இதனையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 59 பேர் தேர்தல் களத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

Read 25 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…