JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

மாட்டு தீவன ஊழல் வழக்கு : லாலு பிரசாத் யாதவ்விற்கு மூன்றரை ஆண்டுகள் சிறை

கால்நடை தீவன ஊழல் வழக்கில், பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான, லாலு பிரசாத் யாதவுக்கு, மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. கால்நடை தீவன ஊழல் தொடர்பாக, இரண்டாவது முறையாக சிறை செல்லும், லாலுவுக்கு எதிராக, மேலும், மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரது உறவினர்கள் பீதியடைந்துள்ளனர்.

ஏமாற்றுதல், கிரிமினல் நடவடிக்கை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்காக, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ், லாலு பிரசாத் யாதவுக்கு, மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.இரு தண்டனையையும் ஒரே காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதத்தை தனித் தனியாக செலுத்த வேண்டும் என்றும், நீதிபதி உத்தரவிட்டார். அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில், மேலும், ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Read 97 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…