JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

சசிகலாவின் இயக்கத்தில் தனிக்கட்சி தொடங்குகிறார் தினகரன்

கட்சியும் சின்னமும் கைவிட்டுப் போன நிலையிலும், ஆர்.கே. நகர் தேர்தலில் பெற்ற வெற்றி, தினகரனைத் தனிக்கட்சி ஆரம்பிக்கும் முடிவை நோக்கித் தள்ளியுள்ளது’’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். தன் ஆதரவாளர்களுடனும் சட்ட வல்லுநர்களுடனும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார் தினகரன். அதன் பிறகு, ‘தனிக்கட்சி’ என்ற முடிவுக்கு தினகரன் வந்துவிட்டார்  என்கிறார்கள்.  Image result for dinakaran images photos cartoons

‘‘அ.தி.மு.க என்ற இயக்கம் எதிர்காலத்தில் எங்கள் கைக்கு வந்துவிடும்’’ - இதுதான் தினகரன் தன் ஆதரவாளர்களிடம் அடிக்கடி சொல்லிவரும் முழக்கம். அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் பதவியைத் தினகரனுக்கு சசிகலா வழங்கியதிலிருந்தே, அந்தக் கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தினகரனுக்கு வந்துவிட்டது.

அதைத் தெரிந்துகொண்டுதான், சசிகலாவின் உறவுகளே தினகரனுக்கு எதிராகத் திரண்டார்கள். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் செயல் பட்டார் தினகரன்.

இரட்டை இலை வழக்கில் சிக்கி திஹார் சிறைக்குச் சென்று, பிறகு கட்சியையும் ஆட்சியில் தன் செல்வாக்கையும் இழந்தாலும் அவர் சோர்ந்து போகவில்லை. ‘இரட்டை இலையும், அ.தி.மு.க என்ற கட்சியும் பன்னீர்-எடப்பாடி அணிக்குச் சொந்தம்’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்த மறுதினமே ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிப்பும் வெளிவந்தது. அங்கு போட்டியிட்டு ஜெயித்தார். அந்த வெற்றி, ‘அ.தி.மு.க-வும், இரட்டை இலைச் சின்னமும் இல்லாமலே தமிழக அரசியல் களத்தில் ஒரு ரவுண்டு வரமுடியும்’ என்ற நம்பிக்கையைத் தினகரனுக்கு ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள்.  

ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுக்குப் பிறகு, தினகரன் ஆதரவாளர்களை வரிசையாக கட்சியைவிட்டு நீக்கத் தொடங்கியுள்ளார்கள் எடப்பாடியும் பன்னீரும். இப்படி நீக்கப்பட்டவர்கள் தினகரனைச் சந்தித்து, ‘‘ஏதாவது ஒரு முடிவு எடுங்கள்’’ என்று புலம்ப ஆரம்பித்தனர். அதன் தொடர்ச்சி யாகவே ‘தனிக்கட்சி’ முடிவை அவர் எடுத்துள்ளாராம். இது குறித்து தினகரனுக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசினோம்.  Image result for dinakaran images photos cartoons

இப்போதுகூட அமைச்சர்கள் சிலரும், எம்.எல்.ஏ-க்கள் பலரும் தினகரனுடன் நல்ல தொடர்பில் உள்ளனர். அதிகாரத்தை இழக்கக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகத்தான், அவர்கள் எடப்பாடியுடன் இருக்கிறார்கள்.

அரசு என்று கவிழ்கிறதோ, அன்றே இவர்கள் தினகரன் பக்கம் வந்துவிடுவார்கள். அந்தச் சூழ்நிலையில், அ.தி.மு.க-வுடன் தினகரனின் புதிய கட்சி இணைந்துவிடும்’’ என்றார்கள் அவர்கள். 

‘தினகரனின் புதுக்கட்சித் திட்டம் சசிகலாவின் ஒப்புதலுடன்தான் நடைபெறுகிறது’ என்கிறார்கள். சமீபத்தில் திருச்சியில் சசிகலாவின் சகோதரர் திவாகரன், ‘‘தற்காலிகமாக, மாற்று இயக்கத்தைத் தினகரன் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு அதிகம் உள்ளது. இதுகுறித்து இரண்டாம் கட்டத் தலைவர்களுடன் பேசி முடிவு செய்வார்’’ என்று வெளிப்படையாகவே ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.

Read 823 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…