JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

தினகரனுக்கு 'குக்கர்' மறுப்பு

'உள்ளாட்சி தேர்தலில், 'குக்கர்' சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்' என்ற,சசிகலாவின் அக்கா மகன் தினகரனின் கோரிக்கையை, தலைமை தேர்தல் ஆணையம்நிராகரித்தது. டில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில், 'தினகரன் கோரும்,அ.தி.மு.க., அம்மா அணி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியே இல்லை' என்றும்,தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 டிசம்பரில் இறந்தார். அதன்பின், அ.தி.மு.க., இரண்டாகப் பிரிந்தது. இதையடுத்து, அ.தி.மு.க., யாருக்கு சொந்தம் என்ற வழக்கு, தலைமை தேர்தல் ஆணையத்தில் நடந்தது. கட்சியின் தேர்தல் சின்னமான இரட்டை இலை முடக்கி வைக்கப்பட்டது. ஓட்டுக்கு பணம் இதற்கிடையில், ஜெயலலிதாவின், ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதிக்கு, இடைத் தேர்தல்அறிவிக்கப்பட்டது. அப்போது, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணி, 'அ.தி.மு.க., புரட்சி தலைவி அம்மா' அணி என்றும், சசிகலா - தினகரன் - முதல்வர் பழனிசாமி அணி, 'அ.தி.மு.க., அம்மா' அணி என்ற பெயரிலும் போட்டியிட்டன. ஓட்டளிக்க பணம் கொடுக்கப்பட்ட புகாரில், அந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.அதன்பின் நடந்த அரசியல் மாற்றங்களில், கட்சியில் இருந்து, சசிகலா மற்றும் தினகரன் ஒதுக்கி வைக்கப்பட்டு, பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன.

அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையிலான, பன்னீர்செல்வம், பழனிசாமி அணிகளே, உண்மையான, அ.தி.மு.க., என்றும், அவர்களுக்கே இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, தினகரன் சார்பில் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே, 'வரும் உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., அம்மா அணி என்ற பெயரில் போட்டியிடவும், சமீபத்தில் நடந்த, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எனக்கு ஒதுக்கப்பட்ட குக்கர் சின்னத்தை ஒதுக்கவும் உத்தரவிட வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்றத்தில், தினகரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. திட்டவட்டம் இந்த வழக்கில், தலைமை தேர்தல் ஆணையம், தன் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், குக்கர் சின்னம் கேட்கும் தினகரனின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

அ.தி.மு.க., அம்மா அணி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியே இல்லை என்றும், தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறி உள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த பதிலால், அ.தி.மு.க., அம்மா அணி என்ற பெயரை தினகரன் பயன்படுத்துவதிலும், குக்கர் சின்னமும் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது; இது, உள்ளாட்சி தேர்தலில் தினகரன் தரப்புக்கு, மிகப் பெரிய பின்னடைவாகவே இருக்கும்.@block@சின்னம் கோர உரிமையில்லை! குக்கர் சின்னம் கோரி தினகரன் தொடர்ந்துள்ள வழக்கில், தலைமை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அ.தி.மு.க., யாருக்கு சொந்தம், இரட்டை இலை யாருக்கு என்பது தொடர்பான வழக்கு, தேர்தல் ஆணையத்தில் நடந்து வந்தது. அந்த நேரத்தில் அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலுக்காக, தற்காலிக ஏற்பாடாகத்தான், இரண்டு அணிகளுக்கும் தனித் தனி பெயர் கொடுக்கப்பட்டது. அந்தப் பெயர், ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பெயர் அல்ல.

அதனால், அதற்கு தினகரன் உரிமை கோர முடியாது. ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட அவருக்கு, குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது; அது சுயேச்சைகளுக்கான பொதுச் சின்னம். அதனால், அந்த சின்னத்தை அடுத்தடுத்த தேர்தல்களில் ஒதுக்க வேண்டும் என கோருவதற்கு, அவருக்கு உரிமை இல்லை. உள்ளாட்சி தேர்தலை, மாநில தேர்தல் ஆணையம் தான் நடத்துகிறது.

அதனால், இந்தக் கோரிக்கைகளை அவர், அங்கு தான் முன்வைக்க வேண்டும். அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read 33 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…