JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

நடிகர்களின் அரசியல் பிரவேசம் எடுபடுமா ?

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கிற பல்வேறு கட்சிகளின் பேச்சாளர்கள், நேரடியாக எந்த நடிகரின் அரசியல் வருகையையும் எதிர்ப்பதில்லை. ஆனால், திரை நட்சத்திரங்களின் வருகையால் தங்கள் கட்சி களுக்கு ஏற்படக்கூடிய பின்னடைவு பற்றிய கவலையை வெளிப்படுத்துகிறார்கள்.

நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்த சிலரது நடவடிக்கைகளால் அதிருப்தியடையும் மக்களில் ஒரு பகுதியினரும் தங்கள் ஆட்சேபத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், அது அவர்களுடைய தனிப்பட்ட குறைபாடாக எடுத்துக்கொள்வதா, திரையுலகிலிருந்து வந்தாலே இப்படித்தான் இருப்பார்கள் என்று முடிவுசெய்வதா?

Image result for mgr- jayalalitha black and white photos images

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச அறிவிப்பு கள் பற்றி மத்திய ஆளுங்கட்சியினர் அடக்கி வாசிக்கிறார்கள். அதேசமயம், நடிகர் கமல்ஹாசனின் அரசியல் தொடர்பான அறிவிப்புகளைக் கடுமையாகச் சாடுகிறார்கள். அதற்குக் காரணம், ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் இவர்களும் தூக்கிப் பிடிக்கிற மதவாத அரசியலுடன் அனுசரித்துப்போகலாம். கமல்ஹாசன் முன்வைக்கும் விமர்சனங்கள் அதற்கு முட்டுக்கட்டை யாகலாம் என்ற கணிப்புதான்.

இவர்களுக்கெல்லாம் நம்பிக்கை தரும் விஷயமாக இருப்பது, எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கி அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்த வரலாறுதான். உண்மையில், எம்ஜிஆரின் அரசியல் பிரவேசமும் வெற்றிகளும் திடீரென நிகழ்ந்த அற்புதங்கள் அல்ல. தொடக்கத்திலிருந்தே திமுகவில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த இடம், தனது திரைப்படங்களில் அவர் திட்டமிட்டுப் புகுத்திய அரசியல் கருத்துகள் ஆகியவற்றின் தாக்கம் மிக முக்கியமானது.

அவரது ஆதரவாளர்களாகத் திரண்டிருந்த இளம் ரசிகர்கள் கூட்டம், தேர்தல் வெற்றிக்குப் பெரிய அளவில் உதவும் என்று அண்ணா மதிப்பிட்டது 1967 தேர்தலில் நிதர்சனமானது.

அதிமுக-வில் ஜெயலலிதா மிகப்பெரிய ஆளுமையாக உருவெடுத்ததும் வெறும் சினிமா புகழால் அல்ல. கட்சிக்குள் அவருக்கு எம்ஜிஆர் அளித்த முக்கியத்துவம், பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொண்டு அவர் நடத்திய அரசியல் பயணம் ஆகியன இருந்தன. 

விடுதலைக்குப் பிறகும் தமிழகச் சூழலில் திராவிட இயக்க அரசியலைக் கொண்டுசென்றதில் திரைப்படங்களுக்குத் தலையாய இடம் உண்டு. திரைப்படங்களுக்கு உரையாடல் எழுதிய அண்ணா, கலைஞர் என ஒரு பட்டாளமே உருவானதும், இயக்கத்தில் அவர்கள் தலைமை இடங்களுக்கு வந்ததும் தற்செயலானவையல்ல. Image result for karunanidhi - annadurai photos

சமூநீதி நியாயங்கள் இங்கு வேரூன்றியிருப்பதிலும், மதவாத அரசியல் இங்கு கால் பதிக்க முடியாத சூழல் நிலவுவதிலும் அன்றைய திரைப்படங்களும் குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்தியிருக்கின்றன.

மக்களிடையே பெயர் பெற்றுள்ள கலையுலகினர் அரசியல், சமூக அக்கறைகளை வெளிப்படுத்துவது நல்லதுதான். எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தாமல் இருப்பதுதான் கவலைக்குரியது. “அறிக்கை விடுவதற்கும் போராட்டம் நடத்துவதற்கும் வேறு சிலர் இருக்கிறார்கள். அதை நாம் செய்ய வேண்டாம்” என்று ரஜினி அறிவித்தது மிகப்பெரிய நழுவல் உத்தி. ‘நாளை நமதே’ பயணத்தைத் தொடங்கவுள்ள கமல்ஹாசனாவது கருத்து என ஒன்றைச் சொல்லி ஆதரவையும் எதிர்ப்பையும் எதிர்கொள்கிறார். 

எல்லோர் வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்துகிற அரசியல் பற்றிய அக்கறை எல்லாத் துறைகளையும் சேர்ந்தோருக்கு வேண்டும். கலைத் துறைச் செயல்பாட்டின் காரணமாக மக்களின் அன்பைப் பெற்றவர்கள் அந்த அன்பை ஆக்கபூர்வமான அரசியலுக்குப் பயன்படுத்தப்போகிறார்களா, ஏற்கெனவே சீர்குலைந்திருக்கிற ‘சிஸ்டம்’ மேலும் பின்னுக்குப் போக உதவப்போகிறார்களா என்பதுதான் பேசப்பட வேண்டும். இவர்களில் சிலர் பெரியதொரு சக்தியாக உருவெடுக்காவிட்டாலும், அரசியல் பிரவேசத்தின் மூலம் சில பேரங்களை நடத்தலாம் என்றுகூட கணக்கிட்டிருக்கக்கூடும்.

நடிகர்கள் நாடாள வரலாம். எப்படி அரசியல் செய்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்க மக்கள் இருக்கிறார்கள்!

 

Read 265 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…