JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

சட்டசபையில் ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்பு : திமுக கடும் எதிர்ப்பு

சட்டசபையில் நாளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் திறக்கப்படுவதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேசமயம் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை ஆதரவு தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் ஜெயலலிதாவின் உருவப்படம் நாளை (பிப்.,12) திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு நேற்று (பிப்.,11) அறிவித்திருந்தது. இப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைப்பார் எனவும், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திமுக, தேமுதிக போன்ற கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதே சமயம் பா.ஜ., ஆதரவு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், சட்டசபையில் ஜெயலலிதா பட திறப்பு விழாவில் திமுக பங்கேற்காது. கோர்ட் தீர்ப்புப்படி மறைந்த முதல்வர் ஜெயலலிதா குற்றவாளிதான். சட்டசபையில் ஜெயலலிதா பட திறப்பு விழா நடந்தால், அதனை திமுக கண்டிக்கும் எனக்கூறினார். 

முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கை: குற்றவாளி என தீரப்பளிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை திறப்பது கண்டனத்திற்குரியது. ஊழல் குற்றவாளியின் படத்தை திறக்க சபாநாயகருக்கு எந்த உரிமையும் இல்லை. அதிகாரமும் இல்லை. அவைக்கு ஒவ்வாத சொற்களை நீக்கும் சபாநாயகர், ஊழல் குற்றவாளியின் படத்தை திறப்பது மிகப்பெரும் இழுக்கு. ஜெயலலிதா படத்தை திறந்து சட்டசபையின் மாண்பை குழைக்கக்கூடாது .சட்டசபையில் உள்ள தலைவர் படங்களின் மாண்பை குறைத்திடும் வகையில் செயல்பட வேண்டாம். ஜெயலலிதா படத்திறப்பை கைவிட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Read 100 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…