JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

எடப்பாடியின் இறுதி முயற்சி : மதில் மேல் பூனையாய் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்

பதவி இழந்த, எம்.எல்.ஏ.,க்களில் பலரை, முதல்வர் தரப்பு வளைத்து வருவது, தினகரனுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, அவரை ஆதரித்ததால், தகுதி இழந்த, 18 எம்.எல்.ஏ.,க்கள் மகிழ்ச்சி அடைந்தனர். Image result for pro ttv dinakaran mla's in admk photos images

பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள், தினகரன் பக்கம் வருவர். அவர் கைக்கு, ஆட்சி அதிகாரம் வந்துவிடும்; நமக்கு அமைச்சர் பதவி கிடைக்கும்' என்ற எண்ணத்தில் இருந்தனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, 'முதல்வர் அணியில், என் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 'ஸ்லீப்பர் செல்'களாக உள்ளனர். தேவைப்படும் நேரத்தில் வெளியே வருவர்' என, தினகரன் கூறி வந்தார்.

ஆனால், தினகரன் வெற்றி பெற்ற பிறகும், அவர் பக்கம், எந்த நிர்வாகியும் வரவில்லை. தற்போது, எம்.எல்.ஏ.,க்கள் சம்பளம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், 'தினகரனை நம்பி வந்து ஏமாந்து விட்டோமே' என்ற எண்ணம், பலரிடம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்களில், ஐந்து பேருக்கு மட்டும், தினகரன் முக்கியத்துவம் தருவது, மற்றவர்களிடம் கசப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை அறிந்த முதல்வர் தரப்பு, அதிருப்தியில் இருப்போரிடம், பேச்சு நடத்தி உள்ளது.

'தீர்ப்பு, உங்களுக்கு சாதகமாக வந்து, தினகரனை நம்பி, ஆட்சியை கவிழ்த்தால், மீண்டும் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். 'எனவே, எங்கள் பக்கம் வந்தால், ஆட்சி இருக்கும் வரை பயன் பெறலாம்' என, கூறி உள்ளனர். இதை அறிந்த, தினகரன் அதிர்ச்சி அடைந்து ள்ளார்.

அவர்களை தக்க வைப்பதற்காக, 'எனக்கு முதல்வர் பதவி மீதுஆசையில்லை. தகுதி இழந்த, 18 எம்.எல்.ஏ.,க்களில், ஒருவரை முதல்வராக்க வேண்டும்; ஆறு பேரை அமைச்சராக்க வேண்டும்' என, முதல்வர் தரப்புக்கு, தினகரன் நிபந்தனை விதிக்க துவங்கி உள்ளார். இதை, முதல்வர் தரப்பு கண்டுகொள்ளவில்லை. தினகரனை ஒதுக்கிவிட்டு, மற்றவர்களை அரவணைத்து செல்ல, முதல்வர் தரப்பினர் தயாராகி வருகின்றனர்.

நடிகர்கள் ரஜினி, கமல் போன்றோர், கட்சி துவங்க உள்ளனர். இந்த சூழ்நிலையில், ஆட்சியை கவிழ்த்து, மீண்டும் தேர்தல் வந்தால், நமக்கு எந்த லாபமும் இல்லை என்பதை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்களில் பலர் உணர்ந்துள்ளனர்.

எனவே, உயர் நீதிமன்ற தீர்ப்பு வந்ததும், அவர்கள் அணி மாறத் தயாராகி வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை தக்கவைக்க, தினகரனும் பல வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

Read 1392 times Last modified on ஞாயிற்றுக்கிழமை, 11 பிப்ரவரி 2018 09:03
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…