JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

"நாளை நமதே' புதிய இணையதளத்தை தொடங்கினார் கமல்ஹாசன்

விரைவில் அரசியல் கட்சியை தொடங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன் "நாளை நமதே' என்ற புதிய இணையதளத்தைத் தொடங்கியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் இந்த மாத இறுதியில் மக்களைச் சந்திப்பதற்காக ராமேசுவரத்திலிருந்து தனது சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து, கமலும் www.naalainamadhe.maiam.com என்ற புதிய இணையதளம் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (பிப்.11) தொடங்கியுள்ளார். 

"நாளை நமதே' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் உறுப்பினராக பதிவு செய்துகொள்ளலாம். ரசிகர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் இணையும் வகையில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. 

இதில் கல்வி, தொழில், சுற்றுச்சூழல், வேளாண்மை, நீர் மேலாண்மை, நிதி உள்ளிட்ட துறைகளில் கருத்துகள், மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவற்றை பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமல் ஏற்கெனவே கடந்த ஆண்டு இறுதியில் "மய்யம்' என்ற பெயரில் செல்லிடப்பேசி செயலி, இணையதளத்தை தொடங்கியிருந்தார். அதில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Read 83 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…