JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  கர்நாடகா எதிர்ப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், அதனை எதிர்ப்போம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
காவிரி வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்தால், அதனை கர்நாடகா எதிர்க்கும். காவிரி கண்காணிப்பு குழு ஏற்கனவே உள்ளதால், மேலாண்மை வாரியம் தேவையில்லை. 

காவிரி பாசன மாநிலங்களை ஒருங்கிணைத்து மத்திய அரசு தீர்வு காண வேண்டும். மேலாண்மை வாரியம் அமைக்க, சுப்ரீம்கோர்ட் காலக்கெடு விதித்துள்ளதாக கூறப்படுவது தவறு. காலக்கெடு ஏதும் விதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Read 78 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…