JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

காவிரி விவகாரம் : திமுகவின்  அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டாததால், தாங்கள் பிப்ரவரி 23ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளதாக திமுக தலைமை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த கூட்டத்திற்கு அதிமுக, பா.ஜ.,விற்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. இக்கூட்டத்தை இன்று பிற்பகல் திமுக திடீரென ரத்து செய்தது.

இதற்கிடையில் காவிரி தீர்ப்பு தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன், தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதே சமயம் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும் அதிகாரம் அரசுக்கே உள்ளது என கூறி இருந்தார். முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், பிப்ரவரி 22 ம் தேதி தமிழக அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும். காலை 10.30 மணிக்கு சென்னை, நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.

காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து, கருத்து கேட்ட பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்திற்கு காவிரி நீரை முழுமையாக பெற அனைத்து கட்சி தலைவர்களுடனும் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read 86 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…