JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

கமல் - சீமான் சந்திப்பு

நடிகர் கமல் தனது அரசியல் கட்சியை அறிமுகப்படுத்தி முதல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று மதியம் 12.30க்கு மதுரை வருகிறார். அவருக்கு மதுரை விமான நிலையத்தில் பிராமாண்ட வரவேற்பு அளிக்க அவரது இயக்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

அதிமுக நிர்வாகிகளை சந்திக்க மாட்டேன் என கமலஹாசன் கூறியுள்ளார். நாளை அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் துவக்கவிருக்கும் கமல் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். இன்று கமல் வீட்டிற்கு இயக்குனர் சீமான் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து இருவரும் நிருபர்களிடம் பேசினர். மாற்றம் வேண்டும் என்ற நேரத்தில் அரசியலில் கமல் குதித்துள்ளார். நாட்டிற்கு நல்லது செய்ய போதிய ஆள் இல்லாமல் இருப்பதால் என்னை போன்ற சினிமா துறையினர் அரசியலுக்கு வர வேண்டியுள்ளது. அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. இதனால் யார் வேண்டுமானாலும் வரலாம் என சீமான் கூறினார். 

தொடர்ந்து கமல் பேசுகையில்; பல தரப்பினரையும் நான் சந்தித்து வருவதில் தற்போது சீமானும் ஒருவர் என்றார். அனைத்து தரப்பினரையும் சந்திக்கும் நீங்கள், அதிமுக நிர்வாகிகளை ஏன் சந்திப்பது இல்லை ? என நிருபர்கள் கேட்டதற்கு, " அங்கு தான் ஊழல் இருக்கிறது ஆட்சி சரியில்லை என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் போது அவர்களை நான் நிச்சயம் சந்திக்க முடியாது. சந்திக்கவும் மாட்டேன் " . என்றார்.

Read 101 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…