JoomlaLock.com All4Share.net

Background Video

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள், பிரசார களத்திற்கு வராததால், தி.மு.க., வேட்பாளர், மருதுகணேஷ், விரக்தி அடைந்துள்ளார். தி.மு.க.,வுடன் கைகோர்த்த தலைவர்கள், வெறும் அறிவிப்போடு உறவை நிறுத்தியதால், ஒட்டுமொத்த, தி.மு.க.,வினரும் சோகம் அடைந்துள்ளனர்.

D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம் சென்னை, ஆர்.கே.நகரில், வரும், 21ல் இடைத்தேர்தல் நடக்கிறது. அதில், தி.மு.க., சார்பில் மருதுகணேஷ்; அ.தி.மு.க., சார்பில் மதுசூதனன்; பா.ஜ., சார்பில் கரு.நாகராஜன்; சுயேச்சையாக தினகரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். Image result for dmk candidate for r.k.nagar by election images photos

பன்னீர்செல்வமும், பழனி சாமியும் ஒன்றிணைந்ததால், அவர்களுக்கு, தேர்தல் கமிஷன், இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது. இது, அ.தி.மு.க., தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதால், அவர்கள், தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக உள்ளனர்.

பழனிசாமி அரசு மீது, மக்களிடம் நிலவும் அதிருப்தியை சாதகமாக பயன்படுத்தி, இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கருதுகிறார். ஏப்., மாதம், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டபோது போட்டியிட்ட, மார்க்சிஸ்ட் கட்சியும், தேர்தலை புறக்கணித்த விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், தற்போது, தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்துள்ளன.

தி.மு.க.,வை தொடர்ந்து விமர்சித்து வந்த, ம.தி.மு.க., வும், அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், ஏற்கனவே கூட்டணியில் இருந்த, காங்., முஸ்லிம் லீக் கட்சிகளுடன் சேர்த்து, தற்போது, தி.மு.க.,வின் கூட்டணி பலம் அதிகரித்துள்ளது. இதனால், தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம், ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.

மருதுகணேஷ், தினமும், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, ஓட்டு சேகரித்து வருகிறார். அவருடன், உள்ளூர் மற்றும் சென்னை உட்பட, பிற பகுதிகளில் இருந்து வந்துள்ள, தி.மு.க., தொண்டர்கள் மட்டுமே பிரசாரம் செய்கின்றனர். ஆனால், அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள, கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் வருவது இல்லை.

இது குறித்து, ஆர்.கே. நகர் தி.மு.க.,வினர் கூறியதாவது:போலி வாக்காளர்கள் நீக்கம்; சொந்த ஓட்டு வங்கி; கூட்டணி கட்சிகளின் ஓட்டு; தினகரன் பிரிக்கும், அ.தி.மு.க., ஓட்டு ஆகியவை, தி.மு.க.,வின் வெற்றிக்கு சாதகமாக உள்ளன. நம்பிக்கை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., ம.தி.மு.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளில் இருந்து, ஒரு கட்சிக்கு, மூன்று பேர் என்று, பிரசாரத்திற்கு வந்தால்கூட, ஒவ்வொரு பகுதியில் உள்ள, அவர்களின் ஆதரவாளர்களின் ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு கிடைக்கும். Image result for dmk candidate for r.k.nagar by election images photos

 

தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள், வேட்பாளருடன், தினமும் பிரசாரத் துவக்கத்தின்போது வருகின்றனர்; சிறிது நேரத்தில் காணாமல் போய் விடுகின்றனர். அவர்கள், தங்கள் கட்சி கொடிகளை, தி.மு.க., தொண்டர்களிடம் வழங்கி விட்டு செல்கின்றனர். அந்த கட்சிகளின் தலைவர்களும், தங்கள் கொடிகளை பார்த்து, தன் கட்சி தொண்டர்கள், பிரசாரத்தில் ஈடுபடுவதாக நினைத்து கொள்கின்றனர். தி.மு.க., தலைமையும், அதை நம்புகிறது.

தி.மு.க.,விலும், மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகளும், முழு வீச்சில் பிரசாரம் செய்வதில்லை. நீண்ட நாட்களுக்கு பின், தி.மு.க.,வுக்கு கிடைத்துள்ள பலமான கூட்டணி, தலைவர்கள் மட்டத்தில் தான் உள்ளது. விடுதலை சிறுத்தை மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், தொகுதியில் கணிசமான ஓட்டு வங்கி உள்ளது.எனவே, கூட்டணி தலைவர்கள் ஒன்றாக, பொதுக் கூட்டங்களில் தோன்றுவதற்கு பதில், பகுதிதோறும் பிரசாரம் செய்ய வேண்டும்.

தங்கள் தொண்டர்களையும், பிரசார பணிகளில் முடுக்கி விட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தி.மு.க., கூட்டணி திட்டம் நடிகர் விஷால், வேட்புமனு தள்ளுபடி செய்த விவகாரத்தில், தேர்தல் அதிகாரி மீது, .மு.க.,வுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆளுங்கட்சி உத்தரவின்படி தான், வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக, தி.மு.க., தரப்பில் கருதப்படுகிறது. 

எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடப்பதற்கு முன், தேர்தல்அதிகாரியை மாற்ற வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள், நேற்று வலியுறுத்தியுள்ளன.எனவே, தேர்தல் அதிகாரியை மாற்றும் முயற்சியை, சட்டரீதியாக மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்த, டிச., 11ல், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் தலைமையில், கூட்டணிக் கட்சிகள் கூட்டம் நடக்கவுள்ளது.

Published in அரசியல்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…